பிரிவுகள்
காண்பவை

கானல் நீர் – குறும்படம்

இன்று காலை வேலைகளுக்கு மத்தியில் வெட்டியாக இருந்த வேளை, மூஞ்சிப்புத்தகத்தில் இந்த குறுப்படத்தை பார்க்க கிடைத்தது.

கானல் நீர் – குறும்படம்

மூன்று வருட பிரிவின் பின்னர் சந்திக்கும் காதலர்கள், நாம் அன்றாடம்(?) காணும் ஒரு கதையாக இருந்தாலும் திரைக்கதையும் சொல்லப்பட்ட விதமும் சிறப்பானவை. இந்த குறுப்படம் எந்த வெட்டல்கள் ஒட்டல்கள் (editing) இல்லாமல் ஒரே காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது. கதையோடு இணைந்து வரும் அந்த பாடல் உணர்வுகளோடு அழகாக பொருந்துகிறது. வசன ஒலிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்காலம். இதில் நடித்திருக்கும் Adit Arun மற்றும் Regina Cesandra ஏற்கனவே M. பாலாஜியின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறுப்படத்தில் நடித்தவர்கள். வேறு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். சிறப்பான நடிப்பு.

புதிய இயக்குனர் Ramya Ananthe Kalingarayar, ஒளிப்பதிவாளர் Sai Kumar மற்றும் L.V.Prasad Film & TV Academy மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து பரிமாணங்களிலும் சிறப்பான ஒரு அழகிய குறுந்திரைப்படம் – கானல் நீர்.

பிரிவுகள்
காண்பவை

அரங்கம் – The Arena (ஒரு மீள் பார்வை)

சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த பதிவில் நான் குறிப்பிட்ட அரங்கம் குறும்படத்தின் ஒரு மீள்பார்வையே இது.

இது பாடசாலை காலத்தில் முற்று முழுதாக பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 30 நிமிட குறும்படம். ஆகவே அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டது. குத்துச்சண்டை போட்டி தொடர்பான ஒரு மர்ம கதை(?). இதுதான் எமது முதல் முயற்சி, ஒரு சிறு முயற்சி.

இங்கு தெரியாவிட்டால் இங்கு காண்க.

இயக்கம் : சுந்தரகுமார்

இயக்குனரும் ஏதாவது காட்சில் தோன்றவேண்டும் என்ற மரபுக்கிணங்க ஒரு காட்சியில் வைத்தியராக தோன்றியிருப்பார். இப்போது இவர் யுனைசஸ் ஸேசஸ் அமேரிக்காவில் ஒரு ‘பாடகராகவும்’ இருப்பதாக அறியக்கிடைக்கிறது.

எழுத்து : நிஷாந்தனன்

அளவுக்கதிகமாக மேடைநாடகங்களில் நடித்தால் செய்தியாளராக வரும் இவர் ஓவர் ஆக்டிங் செய்ததாக கூறப்பட்டது. அதைவிடவும் இந்த குறுப்படத்தின் கதையை இவர் யாரும் பார்க்காத ஒரு ஆங்கிலப்படத்தில் சுட்டதாக சில விஷமிகள் வதந்திகளையும் பரப்பியிருந்தனர். இப்போது இவர் Nish Neelaloj என்ற பெயரில் இங்கிலாந்தில் ‘இருப்பதாக’ கூறப்படுகிறது.

படத்தொகுப்பு : கோகுல்

இவர்தான் இந்த படத்தில் போலீஸ். போலீஸ் யுர்னிபோம் கிடைக்காததால் தான் சாதார உடையில் இவர் வந்ததாக நினைப்பது தவறு. இப்போது இவர் Waterlooவில் ‘படிப்பதாக’ சொல்லிக்கொள்வதாக சொல்லப்படுகிறது.

ஒளிப்பதிவு : தனுஷியன்

இந்த குறுப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்று சொல்லப்பட்டது. இப்போது இவர் எங்கிருந்தாலும் ‘ஸ்டெடியாக’ இருப்பதாக கூறுகிறார்கள்.

இசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்

அருணன் இப்போது பேஸ்ட்ரி சாப்பிடுவதை விட்டு பேகர் ‘சாப்பிடுவதாக’ அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிந்துஜன் சீனாவில் பாம்புக்கு ‘வைத்தியம்’ பார்ப்பதாகவும் அறியக்கிடைக்கிறது.

மேலும் … றோயல் கல்லூரி 2004 குழு தமிழ் மாணவர்கள் …!

இந்த குழுவில் நானும் இருந்தது மகிழச்சி.

(இது ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதி draftல் இருந்தது, so some facts might be outdated by now)

பிரிவுகள்
காண்பவை

ஏழு முட்டாள்களும், ஒரு வீடியோ கமராவும்

பார்க்க மட்டுமே, சொல்வதற்கு எதுவுமில்லை…!

Seven Ordinary men,
Four Ordinary Digital Cameras,
One Ordinary Video Camera,
Two Disastrous Days on the Road…!

Fools are not Made,
They are Born…!

பிரிவுகள்
காண்பவை

குல்பி – குறும்டம்

என்னதான் தெரிந்த கதையானாலும் சில வேளைகளில் சொல்லப்படும் விதத்தாலேயே பிடித்துப் போவதுண்டு. YouTube தளத்தில் எழுமாற்று விதிகளுக்கு அமைவாக உலாவிக் கொண்டிருந்த போது இந்த குறும்படத்தை பார்க்க கிடைத்தது. புனே பல்கலை திரைத்துறை மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

இந்த குறும்படத்தைப்பற்றி அறியமுடிந்தது, “‘KULFI’ awarded for The Best Music Score and The Best Cinematography. Directed by Tanmay Shanware. Music by Pankaj – Pushkar.“.

நானும் இந்த படத்தை ‘ரீ’ ராஜாவை போல தமிழில் ரீமேக்கலாம் என யோசித்துள்ளேன். 😉

Part 1:

Part 2:

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
காண்பவை

இருண்டு போன இதயங்கள் – குறும்டம்

எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த வீடியோ குறும்படங்கள் பற்றி இந்த பதிவில் சொன்னவற்றின் தொடர்ச்சியான மேலும் சில தகவல்களை இங்கு பகிர்கிறேன்.

இருண்டு போன இதயங்கள்
ஏதோ செய்கிறோம் என்றில்லாமல், எதையாவது பயனுள்ள வகையில் சொல்ல வேண்டுமென்பதற்காக முயற்சி செய்தது. பாடசாலைக் கல்வியை முடித்து, கிடைத்த நேரத்தை வீண்டிக்கவும்(?), இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட குறும்ட போட்டிக்காகவும் உருவாக்கப்பட்டது.

கதை/கரு: எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கு உடலுறவு தவிர்ந்த வேறுகாரணங்களும் உண்டு. தெரிந்த விடயம் தான் என்றாலும் பலரும் உணராதிருப்பது.

எழுத்து/இயக்கம் : நிஷாந்தனன்
தயாரிப்பு : விஜிராம்
படத்தொகுப்பு : நிமல்
ஒளிப்பதிவு : தனுஷியன், நிமல்
இசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்
தொழில்நுட்ப உதவி : கோகுல்
நடிகர்கள் : தினேஷ், நிஷாந்தனன், கோகுல், அருணன், சிந்துஜன், பகீரதன், ஜனார்த்தனன்

மேலதிக விபரங்களுக்கு உத்தியோகபூர்வ தளத்தை பார்க்கவும். 🙂

முழுமையான வீடியோ:

இனிமையான தயாரிப்பு நேரங்கள்: 😉

இது என(ம)து பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஒரு பதிவு. மீண்டும் சந்திக்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
காண்பவை

அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்

வணக்கம்,

இன்று காலை பகீ யின் ஊரோடி வலைப்பதிவில் இந்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் பார்த்த பின்புதான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்தது. இது கொஞ்சம் பழசு…. சுயதம்பட்டம் என்றும் சொல்ல்லாம்…

எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சில வீடியோ குறும்படங்கள் இரண்டைப்பற்றி சில தகவல்களை இங்கு பகிர்கிறேன்.

அரங்கம் – The Arena
கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவானது. கதை, போட்டி, பொறாமை தொடர்பான ஒரு மர்ம கதை(?). இது பாடசாலை காலத்தில் முற்று முழுதாக பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 30 நிமிட குறும்படம். ஆகவே அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.

இயக்கம் : சுந்தரகுமார்
எழுத்து : நிஷாந்தனன்
படத்தொகுப்பு : கோகுல்
ஒளிப்பதிவு : தனுஷியன்
இசைக்கோர்வை : அருணன், சிந்துஜன்
தொழில்நுட்ப உதவி : நிமல் 😉
மேலும் … றோயல் கல்லூரி 2004 குழு தமிழ் மாணவர்கள் …!

இதுதான் எமது முதல் முயற்சி, ஒரு சிறு முயற்சி. ஆனாலும் அந்த முயற்சி ஒரு இனிய அனுபவம்.

அடுத்த பதிவில் ‘இருண்டு போன இதயங்கள்‘ பற்றி பார்க்கலாம்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்