பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

கடவுச்சொல் பாதுகாப்பு – சிறு அலசல்

கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்? ஒரு சிறு அலசல்.

Download

பிரிவுகள்
தொழில்நுட்பம்

இணையத்தில் தகவல் பாதுகாப்பு

கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்ப மாற்றங்கள் நாம் இணையத்தில் அதிக நேரம் செலவிடும் ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில், கல்வி போன்றவற்றை தாண்டியும் நாம் பலவிதமான தனிப்பட்ட தேவைகளுக்காகவும் இணையத்தை பயன்படும் தேவை உருவாகியிருக்கிறது. இந்த புதிய சாத்தியங்கள் நாம் எமது தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் அதிகளவில் பகிரும் ஒரு நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

இணையத்தில் தகவல் பாதுகாப்பு

இவ்வாறு இணையத்தல் தனிப்பட்ட தகவல்களை பகிர்வதும் அவ்வாறு பகிரப்படும் விடையங்களின் தகவல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் எனது சில அவதானிப்புக்களையும் கருத்துக்களையும் இங்கு பகிர்கிறேன்.

எனக்கு இணையத்தில் என்னைப் பற்றிய அதிகமான தகவல்களை பகிரும் பழக்கம் உள்ளது. ஆனாலும் இது எல்லாருக்கும் பொருந்தும் என்றும் நான் நினைக்கவில்லை. சிலருக்கு பாதுகாப்பு காரணங்களால் இது முடியாமல் போகலாம். சிலருக்கு தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். வேறு பல காரணங்களும் இருக்கலாம்.

உங்களின் கருத்து என்ன?

பிரிவுகள்
பகிடி

இணையத்தில் திண்ணைப் பேச்சு

கிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்….

ஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான உதாரணமாக நான் காண்பது இணையத்தில் நான் காண்பது டுவீட்டர் தளத்தை…

நீங்களும் டுவீட்டரில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களில் கலந்து கொள்ள இவர்களை பின்தொடருங்கள்…

திண்ணை 1:

 • எமது அண்ணர் லோஷன்
 • சுபானு(“I’m very busy with office work…No time for other work…”)
 • ஆதிரை
 • புல்லட் – இவரும் இந்த திண்ணையா….? (சின்ன டவுட்டு)

(இது ஒரு இலங்கை திண்ணை, இன்னும் பலர் பரபர டுவீட்டர்களும் இங்கு உண்டு…!)

திண்ணை 2:

(இது ஒரு அரசியல் திண்ணை)

திண்ணை 3:

பரபர எழுத்தாளர் பா.ரா தலை(மை)யில் இயங்கும் வெண்பாம் இயக்கம். @nchokkan, @snapjudge, @icarusprakash, @gchandra, @elavasam இன்னும் பல பிரபல எழுத்தாளர்கள், பரபர பதிவர்கள், முன்னாள் பிரபல பதிவர்களும் இந்த திண்ணையில் அடக்கம்.

இவை போல இன்னும் எண்ணற்ற பல திண்ணைகள் இந்த டுவீட்டரில் இருக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிப் பார்க்கலாம். அதுவரை நீங்களும் இந்த திண்ணைகளில் பொழுது போக்கலாம்….!

பி.கு:

 1. இது ஒரு நகைச்சுவைப் பதிவு அல்ல, கடும் சீரியஸ் பதிவு ஆகும்.
 2. இது யார் மனதையும் பண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல.
 3. இந்த திண்ணைகள் குறித்த இந்த விளம்பர பதிவிற்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படவில்லை
 4. இந்த பதிவுக்கும் இந்த டுவீட்டுக்கும் எந்த தொடர்புமில்லை…!
 5. நன்றி…!
பிரிவுகள்
தொழில்நுட்பம்

கடை மூடும் Geocities – இணையவெளியில் இன்னொரு கருந்துளை

நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு(http://www.geocities.com/troyal20012001/) Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities சேவையை இந்த வருடத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

We have decided to discontinue the process of allowing new customers to sign up for GeoCities accounts as we focus on helping our customers explore and build new relationships online in other ways. We will be closing GeoCities later this year. -Yahoo!

இணையப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்ங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமையும், வலைப்பதிவுகள், டுவீட்டர் போன்ற சேவைகளை பயனர்கள் நாடுவதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் Yahoo நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நிர்வாக நிதிநிலை சிக்கல்களும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இணையத்தளங்கள் பிரபலமடைய ஆரம்பித்த காலப்பகுதியில் தனது சேவைகளை தொடங்கிய GeoCities பலருக்கும் தமது தனிப்பட்ட தளங்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. GeoCities ஒரு இணையத்தளம் உருவாக்குவதை பயனருக்கு இலகுவாக்கி domain பதிவு HTML போன்றவை இன்றி இலகுவாக தளங்களை உருவாக்குவதில் முன்னோடியான தளமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே தமிழிலும் பல நூறு தளங்கள் GeoCitieல் அமைக்கப்பட்டன. நான் இதுவரை இணையத்தில் உலாவும் பல சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள தமிழ் தளங்கள் GeoCitiesல் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் GeoCities தளங்களில் பலவும் சாதாரண பயனர்களால் உருவாக்கப்பட்டவையே. முக்கியமாக பல தமிழ் GeoCities தளங்கள் பயனுள்ள தகவல்களை கொண்டிருந்தாலும் அவற்றில் பல தற்போது கவனிப்பாரற்றே இருக்கின்றன. இந்த நிலையில் GeoCities தளம் முடப்படும் போது, இந்த தளங்களும், முக்கியமாக அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள பல ஆயிரங்கள் வரையான கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் காணாமல் போகும் நிலையே ஏற்படும்.

ஆகவே நண்பர்களே உங்களின், அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் தளங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் வேறு இடங்களுக்கு மாற்றிவிடுங்கள். நான் பார்த்தவரையில் பல நூறு தளங்கள் தமிழில் இருக்கின்றன, அவற்றில் சிலவாவது எஞ்சட்டும்.

இணையத்தின் நிலையாமை பற்றிய இந்த பதிவுகளையும் படிக்கவும்:

பிரிவுகள்
தொழில்நுட்பம்

ஒலியோடை – ஒரு ஒலி பதிவு முயற்சி

தமிழ் வலையுலகில் எழுத்து சார் பதிவுகளில் இருக்கின்ற வளர்ச்சியளவுக்கு ஒலிப்பதிவுகள், வீடியோ பதவுகள் என்பன குறைவாகவே இருக்கின்றன. நான் அறிந்தவகையில் திரை இசை பாடல்கள் தரும் சில பதிவுகள் இருக்கின்றன (றேடியோஸ்பதி). இவை தவிர இன்னும் சில ஒலிப்பதிவு உரையாடல் வகையிலான பதிவுகளும் இருக்கின்றன (சாரல்). ஆனாலும் இத்தகைய பதிவுகள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கின்றன.

தமிழில் தனித்த பொட்காஸ்ட் (தமிழ்??) முயற்சிகளும் குறைவுதான். இத்தகைய சூழலில் கேட்கும் ஒரு வாசகர்/நேயர் வட்டத்தை வலையுலகில் உருவாக்க முடியுமா என்பதும் சந்தேகம் தான். ஆனாலும் இவ்வாறு யோசித்துக்கொண்டே இருப்பதை விட முயற்சித்து பார்ப்பதுதான் உத்தமம் என்றவகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தான் ‘ஒலியோடை


வாரம் ஒரு பொட்காஸ்ட் என்றவகையில் ஒரு தமிழில் ஒரு முயற்சியாக வந்திருக்கிறது ‘ஒலியோடை‘. இந்த பொட்காஸ்ட் தொழில்நுட்ப விடையங்களை இலகு தமிழில் தரும் ஒரு முயற்சியாக வெளிவருகிறது. இந்த பொட்காஸ்ட் பதிவில் என்னுடன் ரமணன், மற்றும் அருணன் பங்குபெறுகின்றனர். அத்துடன் இனிவரும் காலங்களில் பல புதிய பகுதிகளையும் சேர்க்கும் எண்ணம் உள்ளது.

எங்களுக்கு இது ஒரு புது முயற்சி, ஒரு புது அனுபவம்…
எங்கள் இந்த முயற்சியில் உங்களின் கருத்துகளையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம்…

எமது அடுத்த பொட்காஸ்ட் 18-10-2008 சனிக்கிழமை வெளியாகும். மேலதிக விபரங்களுக்கு: http://oliyoodai.blogspot.com/

நன்றி:

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: podcast, tamil, oliyoodai, பொட்காஸ்ட்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

டுவீடருக்கு HTML சொல்லிக் கொடுத்தல்

[via: HTML aware Twitter]

டுவீடர், ஒருவகையான கும்மி சேவை என்று சொல்ல்லாம். மனதில் நினைத்த எதையும் 140 எழுத்துக்களில் சொல்லமுடிந்தால் சரி. டுவீட்டரில் நாம் இடும் தகவல்களை எமது வலைத்தளத்திலோ அல்லது வலைப்பதிவிலோ காட்டுவதற்கு டுவீட்டர் நிரல்களை  (பிளாகருக்கான பட்டை) பயன்படுத்தலாம். எனினும் அவற்றிற்கு HTML சொல்லிக் கொடுக்கப்படவில்லை.

டுவீட்டரின் முகப்பு பக்கத்தில் நாம் இடும் சுட்டிகள் சுட்ட கூடியவையாகவும் (), @நண்பர்கள் (ex:- talkout@talkout) அவர்களின் பக்கத்திற்கான சுட்டியாகவும் மாறுவதை காணலாம். ஆனால் இந்த வசதி டுவீட்டரில் நிரல்களில் இல்லை.

இதை செய்வதற்கு பெரிதாக ஒன்றும் சிரமம் இல்லை. உங்களின் டுவீட்டர் நிரலுக்கு கீழே இந்த நிரலை சேர்த்தால் சரி.

<script type='text/javascript'>
document.getElementById('twitter_update_list').innerHTML
= document.getElementById('twitter_update_list').innerHTML.replace(
/([^"'](https?://([-w.]+)+(:d+)?(/([w/_.]*(?S+)?)?)?))/g,
' <a href="$2">$2</a>');
document.getElementById('twitter_update_list').innerHTML
= document.getElementById('twitter_update_list').innerHTML.replace(
/@([a-zA-Z]+)/g,'@<a href="http://twitter.com/$1">$1</a>');
</script>


இதை முயற்சித்து பார்க்கவும். சரியாக வேலை செய்யாவிட்டால் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும். இதன் செயற்பாட்டை இங்கு பார்க்கலாம்.

நன்றி:
சேனக பெர்ணான்டோHTML aware Twitter

கேடயக்குறிப்பு: 
இதை சேர்ப்பதால் உங்களுக்கு அல்லது உங்கள் வலைப்பதிவிற்கு ஏற்படக்கூடிய உடல், உள பிரச்சனைகளுக்கு நான் பொறுப்பாளி அல்ல.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: Internet, Twitter, HTML, regular expression, இணையம், டுவீட்டர்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

உளறினால் இலவசம் (Free Domain + Hosting)

உளறல்.com வழங்கும் ஓராண்டு இலவச ஆட்களம் + இலவச வலையிட வழங்கி இடம் (Free Domain Name + Free Hosting) பரிசு வெல்லுங்கள்

அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.
(அத தான் தினமும் செய்யுறமில்ல…)

மேலதிக விபரங்களுக்கு http://ularal.com/contest.

இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் 😉

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

ஜிமெயிலில் தமிழ்மணம் – Gmail Web Clips

‘ஜிமெயில் வெப் கிளிப்ஸ்’ முகப்பு பக்கத்தில் RSS/Atom வகையான ஓடைகள்(feeds) மூலம் தலைப்புச்செய்திகள், வலைப்பதிவுகள், விளம்பரங்கள் போன்றவற்றை காட்ட பயன்படும் ஒரு வசதி ஆகும். இவை உங்களின் இன்பாக்ஸிலுள்ள மின்னஞ்சல்களுக்கு மேலாக காட்டப்படும். (படம் – 1)

இயல்பிருப்பாக சில செய்தி ஓடைகள் இதில் காட்டப்படும். எனினும் இவற்றை உங்கள் விருப்ப தேர்வுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் வசதி ஜிமெயிலில் வழங்கப்படுகிறது. ‘Settings’ -> ‘Web Clips’ என்று தெரிவுசெய்தால் காட்டப்படும் ஓடைகளின் பட்டியல் தோன்றும் இவற்றில் விருப்பமில்லாதவற்றை நீக்கி, விருப்பமான ஏனையவற்றை சேர்க்க முடியும்.
உதாரணமாக ‘தமிழ்மணம்.காம் திரட்டிய சமீபத்திய 25 இடுகைகள்’ என்ற ஓடையை எவ்வாறு சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.

1. Settings -> Web Clips ஐ தெரிக

2. Search by topic or URL என்பதற்குள் சேர்க்க விரும்பும் ஓடையின் முகவரியை தருக. (படம் – 2)
(உ+ம்: http://www.thamizmanam.com/xml-rss2.php)

3. Search ஐ அழுத்துக

4. காட்டப்படும் தேடல் முடிவுகளில் Add என்பதை அழுத்துவதன் மூலம் ஒடையை Web Clips இல் சேர்க்கமுடியும். சேர்க்கப்பட்ட பின் கீழுள்ளது போல் காட்டப்படும். (படம் – 3)

5. Show my web clips above the inbox என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்க.

முடிவு:

இவ்வாறு சேர்க்கப்பட்ட புதிய ஓடை காட்டப்படும். (படம் – 4)

ஒரு விளம்பரம்: 

இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் திரட்டி
(ஒரு பரீட்சார்த்த முயற்சி)
முகவரி – RSS ஓடை – OPML

மீண்டும் சந்திக்கலாம்…

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: Internet, Gmail, labs, blogs, feeds, இணையம், ஜிமெயில், வலைப்பதிவு

பிரிவுகள்
தொழில்நுட்பம்

தமிழில் Gmail

Gmail இடைமுகம் ஏற்கனவே பல மொழிகளில் உள்ளது பலரும் அறிந்ததே. இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே இதுவரை இருந்தது. கூகிளின் பிரபலமான இலவச மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின்(Gmail) இடைமுகம் இப்போது தமிழ் உட்பட அனேக இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
Gmail தமிழ் (Tamil)

தமிழ் (Tamil) உட்பட اردو (Urdu) , मराठी (Marathi), हिन्दी (Hindi), বাংলা (Bangla), ગુજરાતી (Gujarati), ଓଡିଆ (Oriya), , తెలుగు (Telugu), ಕನ್ನಡ (Kannada) மற்றும் മലയാളം (Malayalam) ஆகிய மொழிகளில் இப்போது ஜிமெயிலை (Gmail) பயன்படுத்தலாம். இதனால் இந்திய பயனர்களில் 90% ஆனவர்களை தமது சொந்த மொழியிலேயே பயன்படுத்த இயலும் என தெரிவிக்கப்படுகிறது.

Gmailல் வேறு மொழிக்கு மாற்றுவதற்கு ‘Settings’ ஐ தெரிவு செய்து அங்கு விரும்பிய மொழியை தெரிவு செய்து மாற்றங்களை சேமிக்கவும்.
Gmail India Settings

ஆனாம் தமிழை விட ஆங்கில இடைமுகமே எனக்கு இலகுவாக இருக்கிறது. இதைத்தான் பழக்க தோசம் என்பதோ…! 🙂

நன்றி: அப்பாஸ்

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு

சில நேரங்களில் சிறிய கருத்துக் கணிப்புக்களை (survey) செய்யும் தேவை நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்போது கூகிளாண்டவரின் புண்ணியத்தால் அது இன்னமும் இலகுவாகிறது. இப்போது Google Docs spreadsheet பயன்படுத்தி இலகுவாக படிவங்களை உருவாக்க முடிவதுடன், வாசகர்களின் கருத்துக்களை சேகரித்து உங்களின் வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதும் இலகுவாகிறது.

பின்வரும் படிமுறைகளை பயன்படுத்தி நீங்களும் ஒரு சர்வேயை உருவாக்கலாம்.

 1. Google Docs பக்கத்திற்கு சென்று New->Spreadsheet தெரிவு செய்யவும்.
 2. விரும்பிய பெயரைக் கொடுத்து சேமிக்கவும் (Save).
 3. Share ஐ அழுத்தவும்.

 4. ‘Invite people:’ என்பதில் to fill out a form என்பதை தெரிவு செய்யவும்.

 5. இறுதியாக Start editing your form… என்பதை தெரிவு செய்யவும்.

  புதிய சாளரத்தில் படிவம் ஒன்றின் மாதிரி காட்டப்படும். அதில் விரும்பிய வகையில் வினாக்களையும் விடை தெரிவுகளையும் உருவாக்கவும்.

 6. இனி என்ன…! சர்வேயை தொடங்குங்க…!

மேலதிக விபரங்களுக்கு இங்கே அல்லது இங்கே பார்க்கவும்.

பரீட்சார்த்த படிவத்துக்கு இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்