பிரிவுகள்
காண்பவை

ஒளிக் கீற்று

சூரிய ஒளியை பின்னணியாக கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களில் படத்திலுள்ள மனிதர்களையோ பொருட்களையோ சுற்றி ஒளிக்கீற்றுக்கள் இருப்பது படத்திற்கு அழகுதான்.

எப்போதும் அவ்வாறாக படம் எடுக்க (என்னால்) முடிவதில்லை. ஆனாலும் அதனை பிற்சேர்கை செய்து சேர்க்கமுடியும். Photoshop, Gimp, மற்றும் இதர மென்பொருள்களிலும் இதை செய்யலாம்.

முதலின் நான் முயற்சித்த ஒரு படம். இறுதியில் பாடத்திற்கான சுட்டி.

படம் 1, படம் 2 –

ஒளிக் கீற்றுடன் படம் –

பாடம் –

  1. http://photoshoptutorials.ws/photoshop-tutorials/photo-manipulation/ray-of-light.html
  2. http://www.tutorialwiz.com/rayoflight/

விரைவில் ஒரு உருப்படியான பதிவோடு சந்திக்கலாம்…  🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

உளறினால் இலவசம் (Free Domain + Hosting)

உளறல்.com வழங்கும் ஓராண்டு இலவச ஆட்களம் + இலவச வலையிட வழங்கி இடம் (Free Domain Name + Free Hosting) பரிசு வெல்லுங்கள்

அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.
(அத தான் தினமும் செய்யுறமில்ல…)

மேலதிக விபரங்களுக்கு http://ularal.com/contest.

இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் 😉

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

ஜிமெயிலில் தமிழ்மணம் – Gmail Web Clips

‘ஜிமெயில் வெப் கிளிப்ஸ்’ முகப்பு பக்கத்தில் RSS/Atom வகையான ஓடைகள்(feeds) மூலம் தலைப்புச்செய்திகள், வலைப்பதிவுகள், விளம்பரங்கள் போன்றவற்றை காட்ட பயன்படும் ஒரு வசதி ஆகும். இவை உங்களின் இன்பாக்ஸிலுள்ள மின்னஞ்சல்களுக்கு மேலாக காட்டப்படும். (படம் – 1)

இயல்பிருப்பாக சில செய்தி ஓடைகள் இதில் காட்டப்படும். எனினும் இவற்றை உங்கள் விருப்ப தேர்வுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் வசதி ஜிமெயிலில் வழங்கப்படுகிறது. ‘Settings’ -> ‘Web Clips’ என்று தெரிவுசெய்தால் காட்டப்படும் ஓடைகளின் பட்டியல் தோன்றும் இவற்றில் விருப்பமில்லாதவற்றை நீக்கி, விருப்பமான ஏனையவற்றை சேர்க்க முடியும்.
உதாரணமாக ‘தமிழ்மணம்.காம் திரட்டிய சமீபத்திய 25 இடுகைகள்’ என்ற ஓடையை எவ்வாறு சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.

1. Settings -> Web Clips ஐ தெரிக

2. Search by topic or URL என்பதற்குள் சேர்க்க விரும்பும் ஓடையின் முகவரியை தருக. (படம் – 2)
(உ+ம்: http://www.thamizmanam.com/xml-rss2.php)

3. Search ஐ அழுத்துக

4. காட்டப்படும் தேடல் முடிவுகளில் Add என்பதை அழுத்துவதன் மூலம் ஒடையை Web Clips இல் சேர்க்கமுடியும். சேர்க்கப்பட்ட பின் கீழுள்ளது போல் காட்டப்படும். (படம் – 3)

5. Show my web clips above the inbox என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்க.

முடிவு:

இவ்வாறு சேர்க்கப்பட்ட புதிய ஓடை காட்டப்படும். (படம் – 4)

ஒரு விளம்பரம்: 

இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் திரட்டி
(ஒரு பரீட்சார்த்த முயற்சி)
முகவரி – RSS ஓடை – OPML

மீண்டும் சந்திக்கலாம்…

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: Internet, Gmail, labs, blogs, feeds, இணையம், ஜிமெயில், வலைப்பதிவு

பிரிவுகள்
தொழில்நுட்பம்

பிளாகர் டிராப்ட் – சோதனைக் கூடம்

Blogger Draft (http://draft.blogger.com) என்பது பிளாகர் புதிதாக அறிமுகப் படுத்தும் செயற்பாடுகளுக்கான ஒரு சோதனை தளம். சாதாரண பிளாகர் தளத்துக்கு வர முன்னர் பல features இங்கு சோதனைக்கு பின்னரே http://www.blogger.com தளத்திற்கு வரும்.

இப்போ புதிதாக : Gmail Style Editor. 
ஜீமெயில் பயனர்களுக்கு பழக்கமானதாக இருக்கும்.

புதியது

ஜீமெயில் போலவே

பழையது

பயன்படுத்தி பார்க்க http://draft.blogger.com/ பக்கத்திற்கு செல்லுங்கள்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
இசை

வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்

வலைபதிய தலைப்புக்களுக்கு பஞ்சமாக இருக்குது, இருக்கிற தலைப்புக்களிலும் எழுத அலுப்பாக இருக்குது. ஆனபடியால் இந்த வாரத்திலிருந்து (அப்பப்ப) பாட்டு போட்டு அலுப்படிக்கலாம் எண்டு இருக்கிறன்.

முதல் சில வாரங்களுக்கு நாங்கள் உருவாக்கிய பாட்டுக்களை தான் தர நினைத்திருக்கிறேன். பின்னர் முடிந்தால் இதர இலங்கை பாடல்களையும் (முறையான அனுமதியுடன் 🙂 ) தரலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

இனி இந்த வார பாடலுக்கு போகலாம்…

பாடல் : வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்
இசைத்தொகுப்பு : முதல் சுவடு
பாடியோர் : அருணன், சிந்துஜன்
பாடல்வரிகள் : சிந்துஜன்
இசை : றீக்ஸ், அருணன்
ஒலிப்பதிவு, தயாரிப்பு : நிமல் 🙂
வெளியீடு : ஈ-பனை கலையகம்

பாடசாலை வாழ்க்கை எல்லோருக்கும் இனிமையானது. இப்போது பல்கலைக்கழகம், வேலை என்று இருந்தாலும், புதிய நண்பர் வட்டங்கள் உருவானாலும், பாடசாலை கால நட்புகள் வித்தியாசமானவை என்றே எண்ணத்தோன்றுகிறது.

இந்த பாடலும் எமது பாடசாலை வாழ்க்கையின் இறுதி வருடத்தில் உருவானதே. நட்பின் ஆழத்தை காட்டிலும் அகலத்தை உணர்ந்த நாட்கள் அவை. இனிவரும் காலங்களின் அதே நட்புடன் வாழ்க்கை பாதையில் பயணிக்கும் கனவுடன் எழுந்த பாடல் இது.

http://projects.techt3.com/muthalsuvadu/songs/player.swf

பாடசாலை நண்பர்கள்

இன்று 4 வருடங்களின் பின் எண்ணிப்பார்க்கிறேன்… இப்போது நாம் (பாடசாலை நண்பர்கள்) அரிதாகவே சந்திக்கிறோம். இப்போதும் இலங்கையில் இருக்கும் நண்பர்களை காண வெள்ளிக்கிழமைகளில் ‘கோயில் வாசல் வரை’ போகிறேன். மற்றவர்களுடன் அவ்வப்போது ஒரு email, Facebook wall post எழுதுகிறோம், எப்போதாவது Skype, GTalk இல் கதைக்கிறோம்.

இந்த பாடலை பாடும் அருணன் இப்போ மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவில், சிந்துஜன் இப்ப டியான்ஜின் சீனாவில். ஆனாலும்… நாங்கள் இப்போதும் நண்பர்கள் தான்…!!!

வாழ்வின் இறுதிவரை நீடித்தால் தான்
உண்மை நட்பென்று ஆகிடுமே…

பாடல் வரிகள்:

வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்
அதில் காண்பதற்கு பல இடமுண்டு
அதைக் கண்டு நாமும் பலனடைவோமே
இனி சண்டைகள் ஏன் சகோதரா?
அன்றுமுதல் இன்றுவரை
உருவம் மாறலாம்
நம் நட்பு மாறுமா
சொல் நண்பா…

நட்பில் உருவான நம் சொந்தம்
என்றும் தரும் நிலையான சொர்க்கம்
உப்பில்லா பண்டம் குப்பையிலே
நட்பில்லா வாழ்வு நரகமே!

நட்பை நீ என்றும் கொண்டாடு
கல்லூரி முடிந்தால் முடிவதில்லை
வாழ்வின் இறுதிவரை நீடித்தால் தான்
உண்மை நட்பென்று ஆகிடுமே…

ஒரு வெற்றி காண நீ போராடு
உன் கையில் உண்டு எதிர்காலமே
நாளைய தலைவன் நீ என்று
வா… வா… தோழனே முன்னேறு!

உங்களின் அன்பான / அதட்டலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 😉

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

தசாவதாரத்துக்கு போட்டியாக இன்னொரு உலக சாதனை…!

ஜூன் 17: பயர்பாக்ஸ் திருவிழா…!

Download Day 2008

பயர்பாக்ஸ் பயன்படுத்தாத பண்பாளர்களுக்கும், பயர்பாக்ஸே கதி என கிடக்கும் என் இனிய நண்பர்களுக்கும்….

பயர்பாக்ஸ் 3 நாளை செவ்வாய் (ஜூன் 17 / ஆனி 3) வெளியாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அதிகளவான பிரதிகளை முதல் நாளில் பதிவிறக்கும் ஒரு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்படவுள்ளது.

டவுண்லோட் நேரம்: (சாதனைக்கு இந்த நேரத்தில் டவுண்லோடவும்)
இந்தியா/இலங்கை – செவ்வாய் இரவு 8.30 10.30 (Indian Standard time)
அமெரிக்கா – காலை 10:00 (San Francisco time)
ஏனைய இடங்களுக்கு – இங்கே பார்க்க

முதல் நாள் முதல் காட்சி என்பதெல்லாம் எமக்கு எவ்வளவு நெருக்கமானவை என்பதை இந்த தசாவதார வாரத்தில் சொல்லவும் வேண்டுமா…!!

உலகளாவிய ரீதியில் பல இலட்சம் பேர் பங்கு பெறும் இந்த டவுண்லோட் திருவிழாவில் நீங்களும் மிக இலகுவாக பங்குபெற முடியும். வயரை வாயால் கடித்து காரோட்டும் சாகசம் 😉 எதுவும் செய்ய தேவை இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது நாளை செவ்வாய் (ஜூன் 17 / ஆனி 3) ‘பயர்பாக்ஸ் 3′தரவிறக்குவது (டவுண்லோட்) மட்டுமே…!

14,000 இற்கும் அதிகமான மேம்படுத்தல்களுடள் பயர்பாக்ஸ் 3 உங்களுக்கு வேகமான, பாதுகாப்பான, இன்னும் சிறப்பான இணைய அனுபவத்தை பெற்றுத்தரும்.

நீங்கள் ஏற்கனவே ஒரு பயர்பாக்ஸ் விசிறி என்றால், புதிய பயர்பாக்ஸை தரவிறக்கி விசிறிப்பாருங்கள். இதுவரை பயர்பாக்ஸ் பாவிக்காதவர் என்றால் இப்பவாவது விசிறிப்பார்க்கலாம்…!

வாருங்கள்… உலக சாதனை ஒன்றின் பங்காளராகலாம்…!!!

(தலைப்பு காரணம் : தசாவதார வாரத்தில் இப்படி தலைப்பு வைக்காட்டி தமிழ்மணம் காட்டாதாம்)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: இணையம், பயர்பாக்ஸ், internet, firefox, world record, genius, download day

பிரிவுகள்
தொழில்நுட்பம்

தமிழில் Gmail

Gmail இடைமுகம் ஏற்கனவே பல மொழிகளில் உள்ளது பலரும் அறிந்ததே. இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே இதுவரை இருந்தது. கூகிளின் பிரபலமான இலவச மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின்(Gmail) இடைமுகம் இப்போது தமிழ் உட்பட அனேக இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
Gmail தமிழ் (Tamil)

தமிழ் (Tamil) உட்பட اردو (Urdu) , मराठी (Marathi), हिन्दी (Hindi), বাংলা (Bangla), ગુજરાતી (Gujarati), ଓଡିଆ (Oriya), , తెలుగు (Telugu), ಕನ್ನಡ (Kannada) மற்றும் മലയാളം (Malayalam) ஆகிய மொழிகளில் இப்போது ஜிமெயிலை (Gmail) பயன்படுத்தலாம். இதனால் இந்திய பயனர்களில் 90% ஆனவர்களை தமது சொந்த மொழியிலேயே பயன்படுத்த இயலும் என தெரிவிக்கப்படுகிறது.

Gmailல் வேறு மொழிக்கு மாற்றுவதற்கு ‘Settings’ ஐ தெரிவு செய்து அங்கு விரும்பிய மொழியை தெரிவு செய்து மாற்றங்களை சேமிக்கவும்.
Gmail India Settings

ஆனாம் தமிழை விட ஆங்கில இடைமுகமே எனக்கு இலகுவாக இருக்கிறது. இதைத்தான் பழக்க தோசம் என்பதோ…! 🙂

நன்றி: அப்பாஸ்

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு

சில நேரங்களில் சிறிய கருத்துக் கணிப்புக்களை (survey) செய்யும் தேவை நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்போது கூகிளாண்டவரின் புண்ணியத்தால் அது இன்னமும் இலகுவாகிறது. இப்போது Google Docs spreadsheet பயன்படுத்தி இலகுவாக படிவங்களை உருவாக்க முடிவதுடன், வாசகர்களின் கருத்துக்களை சேகரித்து உங்களின் வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதும் இலகுவாகிறது.

பின்வரும் படிமுறைகளை பயன்படுத்தி நீங்களும் ஒரு சர்வேயை உருவாக்கலாம்.

  1. Google Docs பக்கத்திற்கு சென்று New->Spreadsheet தெரிவு செய்யவும்.
  2. விரும்பிய பெயரைக் கொடுத்து சேமிக்கவும் (Save).
  3. Share ஐ அழுத்தவும்.

  4. ‘Invite people:’ என்பதில் to fill out a form என்பதை தெரிவு செய்யவும்.

  5. இறுதியாக Start editing your form… என்பதை தெரிவு செய்யவும்.

    புதிய சாளரத்தில் படிவம் ஒன்றின் மாதிரி காட்டப்படும். அதில் விரும்பிய வகையில் வினாக்களையும் விடை தெரிவுகளையும் உருவாக்கவும்.

  6. இனி என்ன…! சர்வேயை தொடங்குங்க…!

மேலதிக விபரங்களுக்கு இங்கே அல்லது இங்கே பார்க்கவும்.

பரீட்சார்த்த படிவத்துக்கு இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
தொழில்நுட்பம்

கூகிள் சமயல்காரன் – Google Cook Beta

கூகிள் பல புதுமையான சேவைகளை வழங்குவது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவர்களின் வெற்றிக்கு காரணம் இதுவாகவும் இருக்குமோ… 🙂

இவர் தான் கூகுளுக்கே சமைக்கிறாராம், பாருங்கோ…!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
பொது

பழம் தமிழ் எழுத்துருக்கள்

ஒரு தொடர் எழுதுவதற்காக முன்னர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு பழைய தாள் கிடைத்தது. பாடசாலை நாட்களில் நானும் நண்பன் ராமும் குறியீட்டு முறையில் எழுத பயன்படுத்திய reference தாள் அது.

ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து பிரதி பண்ணி வைத்திருந்தோம். பழம் தமிழ் எழுத்துருக்கள் அவை. எப்படி எழுதுவது என தெரியாவிட்டாலும், நாமாக ஒரு முறைக்கு எழுதப்பழகி ‘இரகசிய தகவல் பரிமாற்றங்களுக்கு’ [:)] பயன்படுத்தி வந்தோம்.

சரி பதிவுக்கு வருவோம்… பெருசா ஒண்டுமில்ல…. அந்த இரண்டு பக்கங்களையும் இங்கே மின்வருடி போட்டிருக்கிறேன். ஆ,ருக்காவது பயன்பட்டா சந்தோசம், இல்லாட்டி ஒரு பதிவு. 🙂

உயிர் எழுத்துக்கள்:
Tamil Vowels - உயிர் எழுத்துக்கள்

மெய் எழுத்துக்கள்:
Tamil Consonants - மெய் எழுத்துக்கள்

(சுட்டியால் தட்டினால் படம் பெரிதாகும் ?!)

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்