பிரிவுகள்
பகிடி

இணையத்தில் திண்ணைப் பேச்சு

கிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்….

ஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான உதாரணமாக நான் காண்பது இணையத்தில் நான் காண்பது டுவீட்டர் தளத்தை…

நீங்களும் டுவீட்டரில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களில் கலந்து கொள்ள இவர்களை பின்தொடருங்கள்…

திண்ணை 1:

 • எமது அண்ணர் லோஷன்
 • சுபானு(“I’m very busy with office work…No time for other work…”)
 • ஆதிரை
 • புல்லட் – இவரும் இந்த திண்ணையா….? (சின்ன டவுட்டு)

(இது ஒரு இலங்கை திண்ணை, இன்னும் பலர் பரபர டுவீட்டர்களும் இங்கு உண்டு…!)

திண்ணை 2:

(இது ஒரு அரசியல் திண்ணை)

திண்ணை 3:

பரபர எழுத்தாளர் பா.ரா தலை(மை)யில் இயங்கும் வெண்பாம் இயக்கம். @nchokkan, @snapjudge, @icarusprakash, @gchandra, @elavasam இன்னும் பல பிரபல எழுத்தாளர்கள், பரபர பதிவர்கள், முன்னாள் பிரபல பதிவர்களும் இந்த திண்ணையில் அடக்கம்.

இவை போல இன்னும் எண்ணற்ற பல திண்ணைகள் இந்த டுவீட்டரில் இருக்கின்றன. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிப் பார்க்கலாம். அதுவரை நீங்களும் இந்த திண்ணைகளில் பொழுது போக்கலாம்….!

பி.கு:

 1. இது ஒரு நகைச்சுவைப் பதிவு அல்ல, கடும் சீரியஸ் பதிவு ஆகும்.
 2. இது யார் மனதையும் பண்படுத்தும் நோக்குடன் எழுதப்பட்டதல்ல.
 3. இந்த திண்ணைகள் குறித்த இந்த விளம்பர பதிவிற்கு எந்தவித கட்டணமும் அறவிடப்படவில்லை
 4. இந்த பதிவுக்கும் இந்த டுவீட்டுக்கும் எந்த தொடர்புமில்லை…!
 5. நன்றி…!
பிரிவுகள்
பகிடி

பக்திவேல் பதிவுலகிலிருந்து விலகல் – திரட்டிஸ்பொட் திட்டம் கைவிடப்பட்டது

பிரபல புதிய பதிவர் பக்திவேல் பிரபல மூத்த பதிவர்களால் கட்டம் கட்டப்பட்டு பதிவுலகை விட்டு வெளியேறவைக்கப்பட்டதை கண்டித்து புதிதாக ஆரப்பிக்கப்பட இருந்த திரட்டி வழங்கி திட்டமான “திரட்டிஸ்பொட்” திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதிய பதிவரும், வலையுலக புரட்சியாளரும், துப்புதுலக்கி எழுத்தாளருமாகிய (investigative journalist) மதிப்புக்குரிய பக்திவேல் “பிடிக்காத புத்தகங்கள்” என்ற பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவை எழுதி வந்தது, வலையுலகம் முழுதும் அறிந்த்தே. அண்ணலின் அதீத வளர்ச்சி பொறுக்கா கயவர்கள் தமது எழுத்தால் அண்ணலை எதிர்கொள்ள தீரமற்று பின்னூட்ட கயமைத்தனத்தை பயன்படுத்தி அண்மைக்காலமாக தாக்குதல் நடத்திவந்தனர். மூத்த பதிவர்கள் என்ற முகமூடிக்குள் மறைந்து இந்த நயவஞ்சக நாடகத்தை நடத்திய கபோதிகளின் நடவடிக்கை பொறுக்காமல் அண்ணல் பக்திவேல் பதிவுலகைவிட்டு தான் விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

அண்ணல் பக்திவேலின் விலகலானது, பதிவுலகிற்கு மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகிற்குமே பேரிழப்பாகும். இத்த செய்திகேட்டு எம் கண்கள் பனித்தன, வயிறு புளித்தது, இதயம் இடித்தது. திரட்டிகளின் வளர்ச்சிக்கு பெரும் உந்துகோலாக இருந்த பக்திவேல் இல்லாத ஒரு வலையுயக சூழலில் “திரட்டிஸ்பொட்” போன்ற திரட்டி வழங்கி பயனற்றது என நாம் கருதுவதால் இந்த திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது.

நன்றி.
திரட்டிஸ்பொட் – (எதிர்கால) நிர்வாகம்

பிரிவுகள்
பகிடி

விரைவில்…. திரட்டி-ஸ்போட்…

தமிழ்-பிஷ், நியூஸ்-பூனை, ஈ-த-முள், தமிழ்-பர்ஸ்…!

இப்படி நாளோரு வண்ணமும் பொழுதோரு திரட்டியுமாக வளமாக வளர்ந்துவரும் தமிழ்பதிவுலகில் இன்னுமொரு புதுமை முயற்சியாக…

மிக விரைவில்….

திரட்டி-ஸ்போட் (ThirattiSpot)
‘உங்கள் திரட்டி 5 நிமிடத்தில்…’
 • உங்கள் பெயரில், நீங்கள் விரும்பும் பெயரில், உங்கள் வீட்டு பூனைக்குட்டியின் பெயரில் ஒரு திரட்டி தொடங்கவேண்டுமா…?
 • பிளிக் (Pligg) நிறுவுவதற்கு 10 நிமிடம் இல்லையா…?
 • பதிவு எழுத சரக்கு இல்லையா…?

நீங்களும் தொடங்கலாம்… உங்கள் திரட்டியை… 5 நிமிடங்களும் ஒரு பெயரும் மாத்திரமே தேவை… முற்றிலும் இலவசம்….!

மேலதிக விபரங்கள் மிக விரைவில்….!!!

(இது எந்த திரட்டிகளுக்கும் போட்டியான திரட்டி அல்ல… இது ஒரு திரட்டி வழங்கி…!)

அன்புடன்,
நிமல் (எ) நிமலபிரகாசன்

Tags: blogs, aggregation, feeds

பிரிவுகள்
பகிடி

அன்புள்ள அனானி (Dear Annonymous)

எச்சரிக்கை: இது வெட்டியாக இருந்த ஒரே காரணத்தினால் எழுதப்பட்ட பதிவு. (வேலை இருக்கு, இருந்தாலும் நாம வெட்டிதான்…!)

இப்ப ஒரு ரெண்டு நாளா யாரொ ஒரு மலேசிய மாமேதை இந்த வலைப்பதிவில ஒரு ரெண்டு பதிவை சுத்தி சுத்தி வட்டமடிக்குது. ஏனெண்டு எனக்கிண்டா விளங்கேல்லை. வெள்ளவத்தை, புரூஸ்லீ – இந்த ரெண்டு வெத்து வேட்டு போஸ்ட்டுகள மட்டும் இந்த அனானி ஒரு மணித்தியாலத்துக்கு கிட்ட வாசிச்சிருக்கு (45 + 8+ 3). அப்பிடி என்னதான் அதில இருக்கு எண்டு எனக்கே விளங்கேல்லை…!

எண்டாலும் என்னில இவ்வளவு அன்பு வச்சு வாற இந்த அன்புள்ள அனானிக்கு எனட இதயபூர்வமான நன்றிகள்…!

பிரிவுகள்
பகிடி

எயார்டெல் விளம்பரம் – மாறிவிட்ட குமார் சங்கக்கார

குமார் சங்கக்கார

ஹலோ சிறீலங்கா
அடேயப்பா… நான் மாறிவிட்டேன்…

“பசித்திருப்பவர்கள் இனி சிரித்திருக்கலாம்”
– (ஒரு சிங்கள பாடல் வரி)

Tags: Sri Lanka, Airtel, Mobile, Change, Kumar, Sangakara

பிரிவுகள்
பகிடி

எலி புரூஸ்லீ ஆன கதை….!

இந்த பதிவில் இடம் பெறும் சம்பவங்களும், கூறப்படும் பெயர்களும் அனேகமாக உண்மையே. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்படவேண்டிய தேவை இருந்தாலும் மாற்றப்படவில்லை. இந்த பதிவின் நோக்கம் யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. இது ஒரு தீவிர ஆராய்சியின் முடிவாக எழுதப்படுவதுடன் இதை ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்பாகவும் கருதலாம்.

முன்னொரு காலத்தில ஒரு பல்கலைக்கழக்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு பதிவாக தருகிறேன். எலி எலி என்று (இரண்டாவது எலி எதிரொலி) ஒரு நல்ல மாணவன் அங்கு படித்துவந்தார். அவரின் முதலாம் வருடத்திற்குரிய தோற்றத்தை இந்த படத்தில் காண்க.
புரூஸ் லீ - நெ.1

இவ்வாறாக எலி என்ற காரணப்பெயரை பெற்று படித்து வந்த அந்த மாணவன் எல்லோராலும் அவரது தோற்றத்தை காரணம் காட்டி கிண்ணலடிக்கப்பட்டார். இது அவரின் மனதில் மிகுந்த கவலையை ஏற்படுத்திய அதேவேளை, அவர் தானும் வளர்ந்து காட்டுவேன் என்ற வைராக்கியத்தையும் பெற்றார். இதற்கான வாய்ப்பு அவருக்கு அவரின் மூன்றாம் வருடத்திலேயே கிடைத்தது.

அவர் தொழில் பயிற்சிக்காக (Industrial Placement) தெரிவு செய்யப்பட்ட மென்பொருள் நிறுவனத்தில் அனைவருக்கும் பகல் உணவு இலவசமாக வழங்கப்படும். ஆயினும் எலியானவர் அங்கு வழங்கப்பட்ட உணவை பயிற்சிக்காலத்தில் தவிர்த்தே வந்துள்ளார் என்றும் அக்காலப்பகுதியில் தனது நண்பர்களை சந்திப்பதையும் குறைத்து வந்துள்ளார் என்றும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இவ்வாறு 6 மாதங்கள் தலைமறைவாக (தொப்பியோடு) திரிந்த எலி 6 மாத முடிவிலேயே பொதுவில் வெளிப்பட்டிருக்கிறார்.

6 மாதங்களின் பின் எலியை பலர் றோட்டில் கண்டும் கதைக்காமல் போயிருக்கிறார்கள். இதனால் கடுப்பான எலி அவர்களை மறித்து தான் தான் எலி என்று எடுத்து சொல்லியும் பலரால் நம்ப முடியாமல் இருந்திருக்கிறது. காரணம் எலி ஆறே மாதத்தில் புரூஸ்லீ போல் மாறி இருந்திருக்கிறார்.

இது எவ்வாறு சாத்தியம் என்று சந்தேகம் கொண்ட நாம் தீவிரமாக ஆராய்ந்ததில் பின்வரும் இரு புகைப்படங்கள் சிக்கின.

எலியின் உணவுக் கோப்பை.

புரூஸ்-லீ உணவு

எலி வீட்டில் காணப்பட்ட சமையல் புத்தகம்.
புரூஸ்-லீ சமையல் புத்தகம்

அதுவரை காலமும் சைவ பட்சியாக் அறியப்பட்ட எலி உண்மையில் ஒரு ‘முட்டை சைவம்‘ வகை என்ற இரகசியம் இதன்பிறகுதான் வெளிப்பட்டது.

இந்த புகைப்படங்களையும் இதர சாட்சியங்களையும் ஆராய்ந்ததில் நாம் பெற்ற முடிவுகள்:

 • சைவ பட்சிகளில் பலவகை உண்டு

1. முட்டை சைவம்
2. முட்டை கேக் சைவம்
3. சிக்கன் சைவம் (இதில ஒருவகை ரோஸ்ற் சிக்கன் சைவம்)
4. மீன் சைவம் … மற்றும் இன்ன பிற

(இவர்களெல்லாம் சைவம் என்று சொல்லிக்கொண்டு இப்படியான பதார்த்தங்களையும் சேர்த்து அடிக்கிற ஆக்கள்.. 🙂 )

 • சைவ உணவுகளை மட்டும்(?) உண்பதன் மூலமும் உடல் எடையைக்கூட்ட முடியும்.
 • ஒவ்வொரு நாளும் ஒரு முட்டைக்கோப்பி குடிப்பது உடம்பு வைக்க உதவும். (இது எலியின் பகிரங்க அறிக்கையிலிருந்து பெறப்பட்டது). இதைக்கேட்டு இன்னும் fifty அடிக்காத சில பேர் (50 கிலோ எடை தாண்டாதவர்கள்) முட்டைக்கோப்பி இரகசியத்தை பின்பற்றுவதாகவும் தகவல்.
 • இவ்வாறாக உடலை மெருகேற்றிய பின் உடலிறுக்கமான T-Shirt களை தெரிவு செய்து அணிய வேண்டும். (‘ஏதாவது’ பலனை பெறுவதற்கு… எலிக்கு பலன் கிடத்ததா இல்லையா என்பது இன்னும் அறியக்கிடைக்கவில்லை). நீங்கள் சாதாரணமாக நடுத்தர அளவு (medium) அணிபவராயின் சிறிய அளவு (small) T-shirt ஐ தெரிவு செய்தல் நலம். (சும்மா exaggerate பண்ணிக்காட்டத்தான்..!)
 • மென்பொருள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கெல்லாம் தொப்பை மட்டும் வைக்கிறது என்ற கூற்றுக்கு எதிர்மறுப்பாக அமைந்திருக்கிறது எங்கள் எலியின் சாதனை.

கடைசியாக நாங்கள் சொல்வதை நம்பமறுக்கும் எலியின் (இப்போ புரூஸ்லீ) ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கவும். நாங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை மட்டுமே…!
எலி இப்போ புரூஸ்லீ

ஆராய்ச்சி:
CrazyBobs

படங்கள்:
கதீஸ், பிறைதீஸ்

கேடய குறிப்பு:

 • படங்களில் முகம் Gimp பயன்படுத்தி மறைக்கப்பட்டுள்ளது மாற்றப்பட்டுள்ளது. (சொன்னால் நம்பவும்)
 • படத்தில் காட்டப்படும் முகம் உண்மையான எலிதான் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. (இனி நிரூபிக்கப்படலாம்)