பிரிவுகள்
அனுபவம்

விட்டு விலகியது…

அந்த சம்பவம் முதலில் நடந்தது பதினோராம் வகுப்பில் படிக்கும் காலத்திலென்று நினைக்கிறேன். அதுவரை இல்லாத பொறுப்பு வந்ததோ இல்லையோ,வெறுப்பு மட்டும் வரவர கூடிக்கொண்டே வந்தது. ஓருவாறாக என்னவேன்றே புரிந்து கொள்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிடிருந்தது. பின்னர் பன்னிரெண்டாம் வகுப்புக்கு வந்ததுடன் எல்லாம் முடிந்தது போல் இருந்தது.

அதுவும் ஒரு வருடத்தில் தலைகீழாக மாறி அதே எண்ணங்கள், அதே பயங்கள், அதே வெறுப்புக்கள். ஒரே வித்தியாசம் இந்தமுறை உள்ளூர சிறியளவு விருப்பமும் இருந்தது. முடிவு எப்படியிருந்தாலும் முயற்சித்து பார்க்கும் எண்ணம் வந்திருந்தது. மாதங்கள் வருடங்களாக அதுவும் நடந்து வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அப்போது ஆசைப்பட்டது, கிடைக்காது என்று நினைத்தது, கிடைத்த போது மகிழச்சி எல்லை கடந்த நிலையில் இருந்தேன். ஆனால் இதுவும் குறுகியகாலத்திற்கு தான் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கிவில்லை.

சில மாதங்களிலேயே மீண்டும் அதே அதே எண்ணங்களும் சம்பவங்களும். ஆனால் இப்போது அவை பழகிவிட்டிருந்தன. அதன் பின்னரான அண்மைய காலங்களில் இந்த சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளாகிப்போயின. முடிவுகள் எவ்வாறான போதும் முயற்சிக்கும் மனப்பக்குவும் வந்திருந்தது. இவ்வாறாக சில பல படிகளை தாண்டி இன்றய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போதைக்கு எல்லாம் விட்டு விலகியது போல் உணர்கிறேன்.

பார்க்கலாம்… இனி வாழ்க்கை காட்டும் பாதையை…!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: பரீட்சை, exams, “all my final semester exams are over…!”

பிரிவுகள்
அனுபவம்

நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை

0
நீ என்னை காதலிக்கிறாய்.
நானும் உன்னை காதலிக்கிறேன்.
[ஒரு வருடம்]

1
நான் உன்னை காதலிக்கவில்லை.
நீ என்னை காதலிக்கிறாய்.
[நான்கு வருடங்கள்]

5
நீ இன்னமும் என்னை காதலிக்கிறாய்.
நான் உன்னை காதலிக்கலாம்…(?)
நான் உன்னை காதலிக்கிறேன்.
[இரண்டு வருடங்கள்]

7
நான் உன்னை காதலிக்கிறேன்.
இன்னொருவன் உன்னை காதலிக்கிறான்.
நீ …?
நான் உன்னை காதலிக்கிறேன்.
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
[ஒரு வருடம்]

8
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
நான் …?
[ஒரு வருடம்]

9
நான் இதை வலைப்பதிவில் எழுதுகிறேன்.
நீ இதை வாசிக்கலாம்…(?)

அன்புடன்,
நிமல்

பி.கு.:

 1. இது கதையோ, கவிதையோ அல்ல.
 2. இது முற்று முழுதான ‘கற்பனை’.
பிரிவுகள்
அனுபவம்

எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும் – ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம்

“அத்துடன் பலவகை இன்னல்களால் நாள்தோறும் அல்லுற்றுக்கொண்டிருக்கும் மக்களை மனதில் சற்று நிலை நிறுத்துவோமாக! வெறுமனே வெட்டி பந்தாவையும் வெற்று பகட்டையும் குறைத்து…! நன்றி தோழர்களே!”
– இது யாரால் யாருக்கு எப்போது


– இதில் யார் எங்கு எப்போது

கேடயக்குறிப்புக்கள்:

 1. வெள்ளவத்தையில் கூத்தடிப்பதே எனது முக்கிய தொழில்.
 2. வெள்ளவத்தை என்கிற வத்தையை ஏதோ ஆளுகிற நினைப்பில கொழுப்பேறிப் போய் திரிகிறேன்.
 3. கொழும்பு திமிரில திரிகிறேன்.
 4. வெள்ளவத்தையில இருக்கிறபடியால் குறைந்த விலைக்கெல்லாம் பொருட்கள் வேண்டமாட்டேன்.
 5. எனக்கு costly ஆய் தான் items எல்லாம் வேணும்.
 6. தமிழ் தெரியாததாய் காட்டிக்கொள்ள பெருமைப்படுவேன். ஆங்கில மகனாக வெட்டிப்பந்தாவையும் வெற்றுப்பகட்டையும் செய்வேன்.
 7. எனக்கு உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கென்று நானே நினைக்கவில்லை.
 8. Facebook, Hi5, Orkut, MySpace, Blogger, தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி, Google Groups, Yahoo Groups, Mailing lists, Postcard list மற்றும் இதர பொது, தனிப்பட்ட குழுக்களிலும் famous ஆக வேணும் என்றதுக்காகவே வாய்க்கு வந்ததெல்லாம் எழுதுகிறேன்.
 9. எனது இந்த கொழுப்புகள், திமிருகள் எல்லாம் அடக்கப்பட்டு சீர் செய்ய ஆராவது வந்தால் நல்லம்.
 10. வீட்டில இருந்து உளைவெடுத்துக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே இதை எழுதுகிறேன்.

இது தொடர்பான பின்னூட்டங்கள், கருத்துக்கள், கடுப்புக்கள் எல்லாம் தங்குதடையின்றி வெளியிடப்படும். ஆனால் யாரும் சாட்டிலோ, போனிலோ, ஈமெயிலிலோ, பக்ஸ்சிலொ, டெலெக்சிலோ, கடிதத்திலோ, தபாலட்டையிலோ மற்றும் இதர மார்கங்களிலோ இதை நீக்கச்சொன்னால் நிச்சயமாகக நீக்கப்பட மாட்டாது. இந்த விளையாட்டுக்கு வர விருப்பமில்லாதவர்கள் வரத்தேவையில்லை. வர விரும்புபவர்களும் வரவேண்டிய கட்டாயம் இல்லை.

சும்மா இங்க இருந்து கொண்டு வாயால் வெட்டி வீரம் கதைக்கிறதுக்கு என்னவிட்டா வேற ஆள பிடிக்கிறது கஸ்டம். நான் குரைக்கிற நாய், கடிக்கமாட்டேன்.

இது சிலரை குத்திக்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. தொப்பி சரியானவர்கள் போடவும், மற்றவர்கள் பக்கத்தில் இருப்பவரிடம் தொப்பியை கொடுக்கவும்.

One statement from me. As I can’t do anything in action, and do it without any noises; I can’t just keep my mouth closed & shut up. Hope you can understand this languages too. If any difficulties please contact me without any hesitation.

மாறாத அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: Colombo, Wellawatte, dog, me, who

பிரிவுகள்
அனுபவம்

எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும்

வாசிக்க: ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம்

Tags: Wellawatte, Colombo, Self, New Year

பிரிவுகள்
அனுபவம்

2009ல் செய்ய நினைப்பவை

எனக்கு இது கொஞ்சம் ஓவர் தான்.

அடுத்த நாளுக்கு பிளான் போட்டாலே சரியா செய்ததா சரித்திரம் இல்லை. இதில ஒரு வருசத்துக்கு To-Do List வேற போடுறாராம் எண்டு சொல்லுறது கேக்குது. ஆனாலும் என்ட கொள்கை என்னெண்டால் (இது வேறையா) ‘திட்டமிடாம இருக்கிறத விட திட்டமிட்டு செய்யாம விடுறது மேல்’. (மற்றதெல்லாம் female)

அந்தவகையில 2009ம் ஆண்டுக்கான எனது திட்டப்பட்டியல்…

Academic

 1. முதலாவதாக Project eID ஐ நேரத்துக்குள்ள முடிக்கோணும் (இப்பிடி புளோக் எழுதி நேரத்த வீணாக்காம).
 2. ஆராய்ச்சி கட்டுரைகளை திட்டமிட்டபடி வெளியிடுதல், முடிந்தால் இன்னும் சிலதும் எழுதலாம்.
 3. இறுதி ஆண்டு பரீட்சை !!!.
 4. Google Summer of Code (நான் பங்குபற்ற ஏலுமோ தெரியாது… பாக்கலாம்…).
 5. மேல் படிப்புக்கு சரியா திட்டமிடவேணும் (இதுக்கு மேலையுமா…!).

Professional

 1. இலங்கை பதிவர் திரட்டியை செய்து முடித்தல், முடிந்தால் பதிவர் சந்திப்புக்கள்.
 2. ஒரு நல்ல புகைப்பட கருவி, சிறிய வீடியோ கமரா வாங்குதல்.
 3. குறைந்தது ஒரு (பயண) ஆவணப்படம் செய்தல்.
 4. சுயதொழில் திட்டமிடல் (ஏனிந்த வேண்டாத வேலை….?).
 5. ஒரு நிறுவனம் பதிவு செய்தல். (புளோக்கில பதிவு போடுறது இல்லை…).

Personal

 1. வலைப்பதிவுகளிலும் (ஆங்கிலத்திலும் தமிழிலும்) தரமான பதிவுகள் அதிகம் எழுதலாம்.
 2. லியோ கழக நடவடிக்கைகளில் இன்னும் அதிகமா நேரம் செலவளிக்கலாம் (ஒரு சமூக அக்கறை தான்).
 3. நூலகம் தளத்திற்கு அதிகரித்த பங்களிப்பு… !!
 4. வெளிநாட்டு பயணம்/சுற்றுலா போகலாம் (சும்மா…).
 5. ஒரு சில விட்டுப்போன மருத்துவ சிகிச்சைகளை செய்யலாம்.
 6. ஆரோக்கியமான முறையில் கொஞ்சம் எடை கூடலாம். 🙂

இதுவே ஓவர், இதுக்குமேல எழுதினா ரொம்ப ஓவராயிடும்.
பாக்கலாம் இதில எவ்வளவு செய்யலாம் எண்டு.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்…!!!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
அனுபவம்

ஓய்வில்லாத ஒரு ஓய்வு, சில நாட்களுக்கு…

நண்பர்களுக்கு வணக்கம்,

பல நாட்களாக இந்த பதிவில் எதுவும் எழுதவில்லை, இனியும் சில நாட்களுக்கு எழுத முடியும் போல் இல்லை. பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு வேலைகள் தலைக்கு மேல் நின்று டப்பாங்குத்து ஆடுகின்றன. Project முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அதனால் வேறு எந்த வேலைக்குள் தலை போட்டமுடியவில்லை.

ஆகவே சில காலத்துக்கு (குறைந்தது 3 மாதங்களுக்காவது) இந்த பதிவில் எழுதுவது சாத்தயப்படாது என்றே நினைக்கின்றேன். அது போலவே பலரின் பதிவுகளையும் படித்தாலும் பின்னூட்டம் இடுவதும் அவ்வப்போது தான் சாத்தியப்படலாம்.

ஆனாலும் ஒலியோடை பொட்காஸ்ட் பதிவை தொடர முடியும் என்றே நினைக்கிறேன். ஆகவே அங்கு வாரம் ஒருமுறை சந்திக்கலாம்.

எனவே இப்போதைக்கு இங்கிருந்து விடைபெறுகிறேன்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
அனுபவம்

நான் வாசிக்க விரும்பும் ‘சே’ – Che Guevara

இன்று தோழர் சே’யின் 41வது நினைவுநாள். ஒக்டோபர் 9, 1967 இல் பொலிவியாவில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் வழிநடத்தலுடன் பொலிவிய இராணுவத்தினரால் சே குவேரா கொல்லப்பட்டார்.

சே குவேரா அல்லது ‘சே‘ என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) எனக்கு முதலில் அறிமுகமாவது 1999-2000 ஆண்டுக்காலப்பகுதியில் தான். அப்போது தான் நான் மார்க்ஸிசம், சோசலிசம் போன்ற பலவற்றையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அக்கலப்பகுதியில் தான் இன்னொரு புரட்சியாளராக சே அறிமுகமாகிறார். அதன் பின்னரும் பல சந்தர்ப்பங்களிலும் சே தொடர்பான பல தகவல்களை கேட்டும், வாசித்தும் அறிந்திருக்கிறேன்.

இத்தகைய பலதரப்பட்ட வாசிப்புக்கள் சே இன்னொரு புரட்சியாளர் என்பதை விட ஒரு சிறந்த மனிதர் என்ற பிம்பத்தை என்னுள் உண்டாக்கின என்றே எண்ணுகிறேன். ஆனாலும் இன்று சே ஒரு வியாபார குறியீடாக (fasion icon) மாற்றப்படுவதாகவே எனக்கு தோன்றுகிறது. இதன் எதிர்மறை விளைவு இவ்வாறானதாக இல்லாதிருக்க வேண்டும் என்பதே எனது அவா.

சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி என பல பரிமாணங்களை கொண்டிருந்த சே பற்றி நான் தெரிந்து கொண்டுள்ளவை மிக சொற்பமே. அதனால் தான் சே பற்றி இன்னமும் வாசிக்க விரும்புகிறேன்…!

பி.கு: ப(சி)லர் தெரிந்து கொள்ள விரும்பிய என் குறுந்தாடிக்கான காரணத்தை இந்த பதிவு கொடுத்திருக்கலாம். 🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பிரிவுகள்
அனுபவம்

பேப்பர்கள் – பரீட்சை – திரட்டி – மீண்டும் வருதல்

கடந்த இரண்டு மாதங்களாக பிற வேலைகள் சற்று அதிகம் இருந்ததால் பெரிதாக எதுவும் எழுத முடியவில்லை. (இல்லாட்டி மட்டும்??)

முன்குறிப்பு: பின்குறிப்பை வாசிக்கவும்

முதல்ல ஒரு பேப்பர் தரவேணும் எண்டு சொல்லிச்சினம். பேப்பர் தானே தினமும் வாசிச்சிக்கறம் எண்டால் அது research பேப்பராம், சும்மா எல்லாம் எழுதேலாதாம். ஐ3இ (IEEE) முறைப்படிதான் எழுதோணுமாம். சரியெண்டு ஒருமாதிரி ஏதோ எழுதினம். பிறகு சொல்லிச்சினம் ஒரு draft கொண்டுவாங்கோ எண்டு. சரியெண்டு எடுத்திட்டு போனா அதில ஏதோ சரி பிழை எல்லாம் சொல்லிச்சினம். எங்களுக்கிண்டா எதுவும் விளங்கேல்லை. பரவாயிலை எண்டு formatting மட்டும் மாத்தீட்டு குடுத்திட்டம், என்ன நடக்கும் எண்டு தெரியேல்லை.

அது முடிச்சா இன்னும் ஏதேதோ assignment எல்லாம் தந்திச்சினம். என்னெண்டு விளங்கிறது முக்கியமில்லை, submit பண்ணுறது தான் முக்கியம் என்ற பெரும் தத்துவத்தின்படி ஒருமாதிரி செய்து முடிச்சம்.

சரி எல்லாம் முடியுது எண்டு நினைக்க முதலே semester exams வந்திட்டுது. செமஸ்டரில assignments, papers, project work எண்டு சரியா படிக்க முடியேல்லை. (இல்லாட்டி மட்டும்??). சரியெண்டு சொல்லி ஒரு கிழமைக்கு “பரீட்சைக்கான கும்மி” ஏற்பாடு செய்து (இதப்பற்றி இன்னொரு பதிவில விளக்கமா எழுதலாம்), ஒருமாதிரி பரீட்சைகளும் நேற்றோடு முடிஞ்சுது. (இங்க பார்க்க: Done with Exams)


www.math.kent.edu/~white/ugcolloq/

இதுக்கிடையில சும்மா இருக்க கட்டாம நாமளும் ஒரு திரட்டி செஞ்சா என்ன எண்டு நினைச்சு தொடங்கினது தான் http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/. இதுவரை எதுவும் உருப்படியா செய்ய முடியேல்லை. இனித்தான் எதாவது செய்யோணும்.

இனி கொஞ்சம் நேரம் கிடைக்கேக்கை ஏதாவது எழுதுவம். உருப்படியா எழுத ஆசைதான், ஆனா ஏனே முடியிறதில்லை. முயற்ச்சிக்கலாம்.

பின்குறிப்பு:
பேச்சு வழக்கில் எழுத ஒரு முயற்சி செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை என்பது எனக்கே உணரக்கூடியதாக இருக்கிறது. புரியாதவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் கேட்கலாம். 🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்