பிரிவுகள்
அனுபவம்

தியேட்டரில் நானும் திருட்டு வீசீடியும்

அண்மையில் எந்திரன் வெளிவந்த போது திரையரங்கிற்கு சென்று அதை பார்க்கலாம் என்று யோசித்தாலும் பின்னர் இல்லாத இன்ன பல காரணங்களால் டொரண்டில் இறக்கிய கமெரா கொப்பியில் பார்த்துவிட்டேன். அப்படி பார்த்திருந்தால் அது நான் திரையரங்கில் பார்க்கும் ஒரு 15வது படமாகவும் 5வது தமிழ்ப்படமாகவும் முதல் ரஜினி படமாகவும் இருந்திருக்கும்.

அண்மையில் எந்திரன் வெளிவந்த போது திரையரங்கிற்கு சென்று அதை பார்க்கலாம் என்று யோசித்தாலும் பின்னர் இல்லாத இன்ன பல காரணங்களால் டொரண்டில் இறக்கிய கமெரா கொப்பியில் (camera copy downloaded via bit-torrent) பார்த்துவிட்டேன். அப்படி பார்த்திருந்தால் அது நான் திரையரங்கில் பார்க்கும் ஒரு 15வது படமாகவும் 5வது தமிழ்ப்படமாகவும் முதல் ரஜினி படமாகவும் இருந்திருக்கும்.

தியேட்டரும் திருட்டு வீசீடியும் நானும்

நான் ஏன் தியேட்டரில் படம் பார்ப்பதில்லை?

முதலாவது, எனக்கு பிடிக்காத காட்சிளையோ, பாடல் காட்சிகளையோ தவிர்க்க முடியாது. நான் சாதாரணமான ஒரு தமிழ்/இந்தி/தெலுகு/மலையாளம்/பிற இந்திய திரைப்படத்தை பார்க்கும் பொது டெம்லேட் பாடல் காட்சிகளை தவிர்ப்பது வழமை. பாடல்களை கேட்கும் அளவுக்கு பார்ப்பதில் ஆர்வம் இருப்பதில்லை. டெம்லேட் சண்டைக்காட்சி தொடங்கினால் ஹீரோ சண்டையில் வெல்லும் இடம்வரை தாவு. இப்படியாக இரண்டரை மணித்தியால படத்தை பொதுவாக ஒன்றரை மணித்தியாலத்துக்குள்ளாகவே பார்த்து முடித்துவிடுவேன். இது திரையரங்கில் சாத்தியமில்லை.

அடுத்து, எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் திரையரங்கில் மீண்டும் பார்க்க முடியாது. உதாரணமாக வில்லு படத்தில் வரும் சில மொக்கை சிரிப்பு காட்சிகள் எனக்கு பிடிக்கும். அதற்காக ஒரு முழு மொக்கை படத்தை இரண்டரை மணிநேரம் இருந்து பார்ப்பது நியாயம் இல்லை. (நான் திரையரங்கில் பார்த்த 5 தமிழ்ப்படங்களில் வில்லு நாலாவது).

முக்கியமாக, பிடித்த ஒரு படத்தை மீள்பார்வை செய்ய முடியாது. பல படங்களை வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்க முடிந்திருக்கிறது. இது திரையரங்கில் பார்ப்பதில் சாத்தியமில்லை. மேலும் தனிமை விருப்பியான எனக்கு திரையரங்கில் கூட்டத்துடன் படம் பார்ப்பது எப்போதும் குழப்பமாகவே இருந்திருக்கிறது.

ஏன் திருட்டு வீசீடி?

திருட்டு வீசீடி என்று சொன்னதற்காக நான் வீசீடியில் படம் பார்பதாக அர்த்தமில்லை. பொதுவாக நான் பார்பது டொரண்டில் இறக்கிய டீவீடிறிப் (DVD Rip downloaded via bit-torrent). பெரும்பாலும் இது படத்தின் ஒரிஜினல் டீவீடியில் இருந்து எடுத்தாத இருக்கும் நல்ல தரத்திலும் இருக்கும். சிலவேளைகளில் திருட்டு கமெரா கொப்பியின் திருட்டு வீசீடிறிப் கொப்பியாகவும் இருக்கும். ஆனாலும் இது எனக்கு சுதந்திரமான பார்வை அனுபவத்தை கொடுத்திருக்கிறது.

திருட்டு? நியாயமா? தவறில்லையா?

எல்லா தவறிலும் ஒரு நியாயம் இருக்கும். தவறு செய்பவனுக்கு அந்த தவறும் நியாயம் தான். அந்த வகையில் திருட்டு வீசீடி/டீவீடீ/டொரண்ட் வழியே படம் பார்க்கும் எனக்கும் அது நியாயம் தான்.

காரணம் 1: திரையரங்கிற்கு மாற்றீடு இல்லை. உதாரணமாக ஒறிஜினல் வீசீடி/டீவீடீ இருந்தால் அதை வாங்கி பார்க்கும் மனநிலை எனக்கு இருக்கிறது. (விதிவிலக்கு: காரணம் 2) பெரும்பாலாத இந்திய/தமிழ் படங்களுக்கு இது தான் காரணம். பல இந்தி/தெலுகு/இதர இந்திய படங்களை நான் வாழ்த்த/வாழும் பிரதேசங்களில் பார்ப்பதற்கு வேறு மாற்று வழிகளும் இல்லை.

காரணம் 2: ஒறிஜினல் வீசீடி/டீவீடீ வாங்கும் விலையில் இல்லை. இது பெரும்பாலான ஆங்கில படங்களுக்கு. இது விற்பதை விலைக்கும் செலவு செய்ய இயலுமான பெறுமதிக்குமான வேறுபடு. என்னால் வாங்க முடிந்த விலையில் பெரும்பாலும் படங்கள் கிடைத்ததில்லை. ஆனால் அவ்வாறு கிடைத்த சந்தர்பங்களில் வாங்கியிருக்கிறேன்.

இதற்கு முடிவு என்ன?

ஒரு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. நான் தியேட்டரை விட திருட்டு வீசீடி/டீவீடீ/டொரண்ட் வழியே தான் அதிகம் படம் பார்த்திருக்கிறேன். இனியும் அப்படித்தான், நான் சொன்ன காரணங்கள் மாறும் வரை.

(Post image uses images from Bryan Brenneman, Andy Mangold, Andres Rueda, and Schristia licensed under a Creative Commons Attribution license.)

3 replies on “தியேட்டரில் நானும் திருட்டு வீசீடியும்”

🙂

// வில்லு படத்தில் வரும் சில மொக்கை சிரிப்பு காட்சிகள் எனக்கு பிடிக்கும். அதற்காக ஒரு முழு மொக்கை படத்தை இரண்டரை மணிநேரம் இருந்து பார்ப்பது நியாயம் இல்லை. //

😀 😀 😀

// நான் திரையரங்கில் பார்த்த 5 தமிழ்ப்படங்களில் வில்லு நாலாவது //

இங்க logic உதைக்குது. 😉
எந்திரனை திரையரங்கில் பார்த்திருந்தா அது 5ஆவது தமிழ்ப்படமாக இருந்திருக்கும் எண்டா நீங்கள் இதுக்கு முதல் 4 படங்கள் தான் பாத்திருக்கோணும்.
ஆனா நீங்கள் 5 படங்கள் பார்த்ததா சொல்லுறீங்கள்? 😉
__
முட்டையில் மயிர் புடுங்குவோர் சங்கம். 🙂

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.