பிரிவுகள்
அனுபவம்

நாட்குறிப்பு – பெப்ரவரி 2001

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது பெப்ரவரி மாதம்.

நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது பெப்ரவரி மாதம்.

பெப்ரவரி 1:
நூலகத்திலிருந்து பொன்னியின் செல்வன் (பாகம் 1), நாகதேவி எடுத்து வந்திருக்கிறேன். இந்த மாதம் வாசிக்க வேண்டும்.

பெப்ரவரி 2:
புதிதாக உருவாக்கிய இணையப்பக்கத்தை தரவேற்ற “North-pole Net-cafe” போனேன், ஆனால் ஏதோ சிக்கல்.

பெப்ரவரி 5:
‘புதுயுகத்தில் புத்தர்’ என்று ஒரு குறு நாடகம் எழுதியிருக்கிறேன்.

பெப்ரவரி 6:
அவள் மகிழ்ச்சியாக இருப்பதாக தோன்றுகிறது. நாளை மாலை 5 மணிக்கு சந்திக்க கேட்டிருக்கிறாள், என்ன நடக்குமோ…?

பெப்ரவரி 7:
troyal வடிவமைப்பை முடித்துவிட்டேன், ஒரு newsletter செய்யும் எண்ணமும் இருக்கிறது.
பகல் 2.30க்கு தொலைபேசி இன்று வரவில்லை என்றாள். இரவு 10மணிக்கு தொலைபேசி நாளை மாலை 5.30க்கு சந்திக்க கேட்டாள்.

பெப்ரவரி 8:
சந்திக்க போனேன், ஆனால் வரவில்லை. ஏன்…?

பெப்ரவரி 9:
பொன்னியின் செல்வன் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

பெப்ரவரி 10:
சாரணர் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

பெப்ரவரி 13:
கடிதத்தை கிழித்து எறிந்து விட்டேன்.

பெப்ரவரி 14:
இல்லை என்று சொல்லிவிட்டேன், எல்லாம் இத்தோடு முடிந்ததா…! I think that the chapter is closed…!!!
“ePanai Graphics” உருவாக்கம்.

பெப்ரவரி 15:
பொன்னியின் செல்வன் பாகம் 1 வாசித்து முடிந்தது.
என்னை நினைக்க பயமாம்…?!?!

பெப்ரவரி 17:
நண்பன் ஒருவன் தன் காதலிக்கு முதல் கடிதம் கொடுத்தான்.

பெப்ரவரி 24:
நண்பனின் காதல் இனி இருதலைக் காதல்…

பெப்ரவரி 28:
இன்று பாடசாலையில் ஆசிரியர்-மாணவ தலைவர்கள் கிரிக்கட் போட்டி. நானும், விஜிராமும் இன்னும் சில நண்பர்களும் 12 மணியளவில் பாடசாலையில் இருந்து மதில் பாய்ந்து வீடு வந்தோம்.

குறிப்புகள்:
என் கை எழுத்தை திருத்துவதா, தலை எழுத்தை திருத்துவதா – குழப்பம்…!

(தொடரும்…)

(Post image plagiarized from Rami Halim)

12 replies on “நாட்குறிப்பு – பெப்ரவரி 2001”

பெப்ரவரி 14:
இல்லை என்று சொல்லிவிட்டேன், எல்லாம் இத்தோடு முடிந்ததா…! I think that the chapter is closed…!!!

பின்னோக்கிய பார்வை..

ஜனவரி 23:
இன்று ‘நாம்’ இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக தோன்றுகிறது.

3 வாரங்களுக்குள் படித்து முடித்து விட்டீர்களா… ?? இல்லை படிப்பதற்குப் புரியவில்லையா?? இல்லை புரிந்துகொள்ள முயற்றிக்கவில்லையா?? ஆனால் பெப்ரவரி 14 இல் ஏன் அந்தக் புத்தகத்தை மூடினீர்கள்.. வேறுஒரு நாளை தெரிவு செய்திருக்கலாமே…

பெப்ரவரி 24:
நண்பனின் காதல் இனி இருதலைக் காதல்…

இந்த வசனங்களில் ஒரு நீண்ட ஏக்கம் தெரிகின்றதே..

Like

இந்த இல்லை, நீங்கள் நினைக்கும் இல்லை இல்லை. தொடரும் பதிவுகளில் காரணம் புரியலாம்.

இந்த நாள் தானாக தெரிவானது என்று நினைக்கிறேன். உங்களுக்கே காரணம் புரிந்திருக்கும்.

நீண்ட ஏக்கம், நெடிய ஏக்கம் எதுவும் இல்லை. ஆங்கிலத்திலிருந்து ஏக்கத்தை எல்லாம் மொழிபெயர்க்கும் அளவுக்கு எனக்கு புலமையும் இல்லை. நண்பனின் காதல் என்பதால் மகிழ்ச்சி. இனி அவனோடு சேர்ந்து தெருவெல்லாம் அலையும் வேலை இல்லை என்பதாலும் தான். 🙂

Like

நிமல் அண்ணா,
மிகச் சிறிய வயதிலேயே வார்த்தைகளை “சுருக்கப்” பழகியிருக்கிறீர்கள்.
முரண்பாட்டுக் கவிதைத் தொகுப்பு மாதிரி அழகாகவும் இருக்கிறது, யதார்த்தமும்.

Like

“இன்று பாடசாலையில் ஆசிரியர்-மாணவ தலைவர்கள் கிரிக்கட் போட்டி. நானும், விஜிராமும் இன்னும் சில நண்பர்களும் 12 மணியளவில் பாடசாலையில் இருந்து மதில் பாய்ந்து வீடு வந்தோம்.”

😦 i miss those days

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.