எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பெரிதாக இருந்ததில்லை. நான்கு வருடங்கள் (1999-2002) ஏதோ எழுதியிருக்கிறேன். அதில் அதிகமாக எழுதிய வருடம் 2001. அந்த நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த அனேக பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். அந்த காலத்தில் Twitter இருந்திருந்தால் டுவீட்டியிருக்க வேண்டியவை… 😉
ஜனவரி 10:
கடல்புறா (பாகம் 2) வாசித்து முடித்துவிட்டேன்.
ஜனவரி 13:
கடந்த மூன்று நாட்களாக எனது ஓவியங்கள் காட்சிப்படுத்திய ஒரு ஓவிய கண்காட்சியில் கலந்துகொண்டேன்.
ஜனவரி 15:
இன்று காலை கோவிலுக்கு போனேன்.
ஜனவரி 20:
சாரணர் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
ஜனவரி 21:
கணித பரீட்சையில் 100 புள்ளிகள்.
ஜனவரி 22:
Macromedia Flash பயன்படுத்தி ஒரு அசைபடம் உருவாக்கியிருக்கிறேன், நன்றாகத்தான் இருக்கிறது. பண்டாரவன்னியன் புத்தகம் வாசித்து முடித்துவிட்டேன்.
ஜனவரி 23:
இன்று ‘நாம்’ இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாக தோன்றுகிறது, ஏனென்று தெரியவில்லை. நாளை மாலை 5 மணிக்கு சந்திப்பதாக சொல்லியிருக்கிறேன்.
ஜனவரி 24:
அந்த கடிதம் கிடைக்காமலேயே இருந்திருக்கலாம்.
ஜனவரி 25:
Windows Movie Makerல் ஒரு அசைபடம் உருவாக்கினேன்.
ஜனவரி 26:
புதிய மின்னஞ்சல் முகவரி nimal-ana@newmail.com. ஒவ்வொரு வெள்ளியும் மின்னஞ்சல் பார்க்க வேண்டும்.
ஜனவரி 27:
கடல்புறா (பாகம் 1) வாசித்து முடித்தேன்.
ஜனவரி 28:
இன்று ‘நாம்’ இருவரும் குழப்பத்துடனும் கவலையுடனும் இருந்ததாக தோன்றுகிறது.
ஜனவரி 29:
இலவசமாக இணைய பக்கங்களை 8m.com என்ற தளத்தில் உருவாக்கலாம் என்று விஜிராம் மூலமாக தெரிந்துகொண்டேன். ஏதாவது செய்ய வேண்டும்.
ஜனவரி 30:
‘உலகம் ஒரு அகதி முகாம்’ என்ற தலைப்பில் ஒரு நீ…..ண்ட கட்டுரை எழுதினேன். என்னுடைய எழுத்து எனக்கே திருப்ப வாசிக்க கடினமாக இருந்தது.
ஜனவரி 31:
troyalist என்று ஒரு இணைய பக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.
(தொடரும்…)
(Post image plagiarized from Jens Kuehnemann)
4 replies on “நாட்குறிப்பு – ஜனவரி 2001”
"ட்வீட்டர் இல்லாததால் டிவிட்டாதவை" என்ற வரிகள் அழகு. சின்னச் சின்ன விடயங்களாக இருந்த போது, பெரியதோர் கதையொன்று அங்கு விரிவதாக உணர்கிறேன். "நாம்" என்பதில், இருக்கும் அடுத்த element, என் விடயம் போல், அஃறிணையாக இருக்காது (http://niram.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/) என்று நம்புகிறேன். 😛 2001ஆம் ஆண்டின் என் நினைவுகளை உங்கள் பதிவு உசுப்பிவிட்டதாய் உணர்கிறேன். "இன்னொரு பிரபஞ்சம்" தொடரும் தூசுதட்டப்பட்டு தொடரப்பட வேண்டும் என்பதைச் சொல்லுவதாய் அந்த உணர்வு இருந்தது. நன்றி நிமல். தொடர்ந்து சொல்ல மறக்காத ட்வீட்டுகளை அறியும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அசத்துங்க.. 🙂
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
LikeLike
உண்மைதான்… பழைய டயரிகளை புரட்டிப் பார்ப்பதும் பழைய நினைவுகளை உருட்டிப் பார்ப்பதும் வித்தியாசமான ஒரு உணர்வு. உங்களுளைய “இன்னொரு பிரபஞ்சம்” தொடரையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
“நாம்” தொடர்பான ஏனைய பதிவுகள் 😉
நன்றி,
நிமல்
LikeLike
இன்று தான் நீங்கள் ஓவியம் கூட வரைவீங்கள் என்று தெரிந்து கொண்டேன். பலவித திறமைகள் கொண்டவர்கள் மிக குறைவு. அதில் நீங்களும் ஒருவர் 🙂 . தொழிநுட்ப பயணத்துடன் கலைப் பயணமும் தொடர வாழ்த்துக்கள்.
LikeLike
கலைப் பயணமா…? இதெல்லாம் கொஞ்சம் ஓவர்… 🙂
நன்றி…
LikeLike