பிரிவுகள்
காண்பவை

பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)

நான் திரையரங்கில் படம் பார்ப்பது குறைவு, பெரும்பாலும் YouTubeஉம் Torrentஉம் தான். அப்படி பார்த்த சில படங்கள் பற்றி, நான் அவ்வப்போது எழுதி வைத்தவை. (ஒரு டயறி குறிப்பு போல).

Just for my personal reference…!

விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) – நான் வாழ்க்கையில் பார்க்கும் என்னைச்சுற்றி நடக்கும் (பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்) பல சம்பவங்கள். இனிய Romantic Musical. அளவான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு. தெலுகு Ye Maaya Chesave முடிவை விட Vinnaithaandi Varuvaayaa முடிவுதான் பிடித்திருத்தது. படம் பிடித்திருந்தது…! (9/10)

ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) – தமிழில் நான் பார்த்த படங்களில் மிகவும் வித்தியாசமான படங்களில் ஒன்று, (தமிழில்…!). முக்கியமாக ஒளிப்பதிவும் இசையும். படம் பார்த்து முடித்த பின் எழுத்திலே கொண்டுவர முடியாத ஒரு உணர்வு. இப்படியான படங்கள் இனியும் வரவேண்டும். படம் பிடித்திருந்தது. (9/10)

தமிழ் படம் (Thamizh Padam) – புது முயற்சி. முடிவிலே திகட்டினாலும், மொத்தத்தில் சூப்பர். நல்ல இசை, ‘ஒமகசீயா’ பாடலும் தான். படம் பிடித்திருந்தது. (8/10)

கோவா (Goa) – நாம் பொதுவிலே பேச மறுக்கும், ஆனால் ‘கலாச்சாரத்துக்கு புதிது அல்லாத’ உறவு முறைகளை சாதாரணமாக காட்சிப்படுத்தியிருந்தது. நல்ல நகைச்சுவை, நல்ல இசை, நல்ல பொழுதுபோக்கு படம். படம் பிடித்திருந்தது. (7/10)

புகைப்படம் (Pugaippadam) – இந்த வருடம் வெளியான, நான் பார்த்த முதல் தமிழ்ப்படம். வித்தியாசம் என்று எதுவும் இல்லாத கதை, புதிய நடிகர்கள். காலத்தால் சற்று பிந்திய, இனிய இசை. இன்றைக்கும் என் பயணங்களில் நான் கேட்கும் ‘இது கனவோ’ பாடல். முடிவில் கொஞ்சம் சொதப்பல். படம் பிடித்திருந்தது. (7/10)

குட்டி (Kutty) – சுமாரான கதை, நல்ல நகைச்சுவை. (பார்க்கும் போது) படம் பிடித்திருந்தது. (இப்போது) படம் பரவாயில்லை. (6/10)

தீராத விளையாட்டு பிள்ளை (Theeradha Vilaiyattu Pillai) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். சுமாரான நகைச்சுவை, சுமாரான பாடல்கள், நல்ல பாடல் காட்சிகள். படம் பரவாயில்லை. (5/10)

கச்சேரி ஆரம்பம் (Kacheri Arambam) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். படம் பரவாயில்லை. (5/10)

(பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்)

2 replies on “பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)”

தமிழ் பார்த்து நீண்ட நாள். ஆனால் பெரிதாக ஒன்றும் விடுபட்டதாக தெரியவில்லை. பார்த்த படங்களை ஒப்பிடும் போது பல ஆங்கில படங்களும் ஈரோப்பிய படங்களும் சிறந்த வகையில் முன்னணி வகிக்கின்றன.

ஒப்பிட ஹேராம் Vs Der Baader Meinhof Komplex ..

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.