பிரிவுகள்
அனுபவம்

ஒரு காதல் கதையின் மறுபக்கம்

நான் நீண்டநாட்களுக்கு முன்னர் எழுத தொடங்கி பின்னர் காணமல் போன கதையின் மறுபக்கம். இது எனது பதிவுக்கு பதில் பதிவும் அல்ல, இது நான் எழுதியதும் அல்ல. எழுதியவருக்கு நன்றி…!

உன் ரசிகையாய் வந்து காதலாய் மாறி கனவாகிப்போன கதை இது!

பள்ளிப்பாடம் படிக்கும் போது கொஞ்சம் bore அடிக்க
வேறெந்த நினைவுமின்றி என் நினைவில் நீ மட்டும் எப்படி?

நீ விட்டுச்சென்ற நினைவுகள் அழிந்து போக
உன்மேல் இருந்த காதல் சிதைந்து போக
உனக்காக என் உடல் தழும்புகள் மட்டும் இன்னும் உயிர் வாழுவதனாலா?

காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவனும் நீ தான்
உன்னோடு என் காதல் கல்லறைக்கு அடிக்கல் எடுத்து தந்தவனும் நீ தான்!

என் காதல், காதல் என்ற புனிதசொல்லை சுமக்க தகுதியானதா? தெரியவில்லை

இரண்டு வருட முகில்கள்
எந்நாளும் பனிமூட்டம்
எப்போதாவது சூரிய சந்திர கிரகணம்.
உன் காதலில் முழுமையில்லை
என் காதலில் வரமுமில்லை.

இரண்டு வயதுக்குழந்தையின் சாமர்த்தியம் கூட தெரியாத பேதை இவள்.
என் கண்கள் கடலில் மூழ்கியும், கண்ணாளனின் கருணை இல்லை.
கடவுளாகிப்போனான் அவன் அதாவது
கல்லாகிப்போனான்.

நான்கு வருடம் நாராய் போனது.
உன்னை காதலித்த இரு வருடம்
உன்னை மறக்க முயன்ற இரு வருடம்.
ஐந்தாம் வருட இன்ப அதிர்ச்சியாய் என்னை தேடி வந்தாய் !

என்னை காதலிப்பதாய் உணர்ந்தாய்
என் நான்கு வருட அழிவிற்கு நீதி கேட்ட போது
எனக்கு possessive என்றாய்.
உன் கண்ணில் நான் என்னை பார்த்ததும் உண்மை
அதில் உன் குற்ற உணர்வு பாராததும் உண்மை.

மீண்டும் கைப்பிடிப்போம் என்றாய்!

உன்னை பிடிக்கும்
உன்னுடன் வாழப்பிடிக்கும்
உனக்காக சாகப்பிடிக்கும்
ஆனால் உன் சாக்குப்போக்கு காரணம் பிடிக்கவில்லை.

என்னிடம் உனக்கு இரண்டாம் முறை காதல் வரக்காரணம் புரியவில்லை
புரியாத காதல் எளிதில் பிரியாதா?

முதன் முறை பூகம்பத்தில் ஏற்பட்ட தாக்கமே
பத்து வருடமாய் இன்னும் பாத்தி கட்டி நிற்கும் போது
இரண்டாம் முறை ஏற்க மனம் இடம் கொடுக்குமா?
கொடுத்தாலும் தாங்குமா ???????????

இன்று உனக்கு ஒரு காதலி
எனக்கு ஒரு காதலன்
நாம் இருவரும் நண்பர்கள்!
திரைப்படங்கள் கூட இன்னும் சித்தரிக்காத உறவு இது.

நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் உனக்கு
நான் தவிக்க தவிக்க என் காதலை தூக்கி ஏறிந்ததற்கு!

14 replies on “ஒரு காதல் கதையின் மறுபக்கம்”

சுப்பராயிருக்கு.. யாரோ ஒரு பொண்ணு நினைச்சு நினைச்சு உருகி எழுதியிருக்கா.. நக்கலென்று நினைக்க வேண்டாம்.. உண்மையிலெயெ உணர்வுபூரமா எழுதியருக்கு… வாழ்த்துக்கள்..

//முதன் முறை பூகம்பத்தில் ஏற்பட்ட தாக்கமே
பத்து வருடமாய் இன்னும் பாத்தி கட்டி நிற்கும் போது
இரண்டாம் முறை ஏற்க மனம் இடம் கொடுக்குமா?
கொடுத்தாலும் தாங்குமா ???????????//

ஆமா யாரு இந்த வரிகளின் சொந்தக்கார(ரி)ர் ??

Like

//எழுதியவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சிலவேளை கேள்விப்பட்டிருக்கலாம்…//

தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.. ஆனால் ஒன்று.. வரிகளின் ஆழமும்.. தரமும் நேர்த்தியும் எழுதியவர் மேல் தனி மதிப்பையே தருக்கின்றது..

Like

//உன்னை பிடிக்கும்
உன்னுடன் வாழப்பிடிக்கும்
உனக்காக சாகப்பிடிக்கும்
ஆனால் உன் சாக்குப்போக்கு காரணம் பிடிக்கவில்லை.
//

கடைசிவரி touching !!

Like

//உன்னை பிடிக்கும்
உன்னுடன் வாழப்பிடிக்கும்
உனக்காக சாகப்பிடிக்கும்
ஆனால் உன் சாக்குப்போக்கு காரணம் பிடிக்கவில்லை.//

இதை எழுதியவரின் மனப்பாங்கு எனக்குப் பிடித்திருக்கின்றது.

Like

நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் உனக்கு

நான் தவிக்க தவிக்க என் காதலை தூக்கி ஏறிந்ததற்கு!

Like

//முதன் முறை பூகம்பத்தில் ஏற்பட்ட தாக்கமே
பத்து வருடமாய் இன்னும் பாத்தி கட்டி நிற்கும் போது
இரண்டாம் முறை ஏற்க மனம் இடம் கொடுக்குமா?//

காதலில் இரண்டாம் முறை என்ற வார்த்தை தடை செய்ய பட்டுள்ளது…

Like

நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் வலைத்தளம் வருகிறேன்,

இந்தக் கவிதை படிக்கையில் என்னமோ செய்கிறது…, உண்மையின் ரணம்….ஹ்ம்ம்

Like

மிகவும் அருமையான கவிதை .. சொல்வதற்கு வார்த்தையே இல்லை

//இரண்டு வயதுக்குழந்தையின் சாமர்த்தியம் கூட தெரியாத பேதை இவள்.
என் கண்கள் கடலில் மூழ்கியும், கண்ணாளனின் கருணை இல்லை.
கடவுளாகிப்போனான் அவன் அதாவதுகல்லாகிப்போனான்//

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.