பிரிவுகள்
இசை

சுற்றும் காற்றுக்கு சுதந்திரம், நம் சிட்டுக்குருவிக்கு ஏன் இல்லை

அண்மைக்காலமாக பதிவுகள் எழுத நேரமும் இல்லை, எண்ணமும் இல்லை. ஆனால் நண்பன் சாய் சிவாவின் இந்த பாடலை கேட்டதிலிருந்து இதை பதிவில் பகிரவேண்டும் என்று தோன்றியது. பாடலை கேட்டு, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்….

பாடல் கேட்பதற்கு…
http://iLike.com/s/96BNM

Artist : Sai Shiva & Vijay
Lyircs : Sai Shiva
Music Produced and Arranged by : Sai Shiva

வரிகள் மீள வாசிப்பதற்கு…

நேற்று உன் தினம்
நாளை சொப்பனம்
நாட்கள் நீளலாம்
காயம் ஆறுமா

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
தாய் மண்ணைத் துறந்தே
இன்று தெருவில் அலைந்தோம்

ஆனா(அ) என்றால் அம்மா என்று
மழலை சொல்ல மறுக்கிறது
காயம் கொண்ட நாள் முதலாய்
அகதி என்று சொல்கிறது

விண்ணை மறைக்க
இரு விரல்கள் போதுமே
நம் கண்ணீர் துடைத்தே
அவை தேய்ந்தே போனதே

சுற்றும் காற்றுக்கு சுதந்திரம்
நம் சிட்டுக்குருவிக்கு ஏன் இல்லை
வட்ட நதிகள் தான் வாழ்க்கையே
நம் நம்பிக்கை இழக்கவில்லை

எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்
தாய் மண்ணைத் துறந்தே
இன்று தெருவில் அலைந்தோம்

வீடு வாசல் இருந்தும்
மர நிழலில் சரணடைந்தோம்
ஊர்வன உறைவது போலவே
பூமிக்கடியில் வாழ்ந்திருந்தோம்

அன்னை அணைந்த
கரங்கள் யாவுமே
நம் கவலை துவைத்தே
இன்று தேய்ந்தே போனதே

நம் தேசம் விட்டுப் பிரிகையில்
உன் கரகோஷங்களை மறக்கவில்லை
நம்மவர் உயிரைப் பறிக்கையில்
உன் முகத்தின் ரேகைகளை மறக்கவில்லை

நேற்று உன் தினம்
நாளை சொப்பனம்
நாட்கள் நீளட்டும்
நம் காயம் உலகை ஆளட்டும்

This song is dedicated to all the innocent people who lost there lives in the war.

சாய் சிவாவின் ஏனைய பாடல்களையும் கேட்க…
http://www.facebook.com/pages/saishiva/59074327500

நம்பிக்கை மட்டுமே இனி நம் கையில்…!


நிமல்