பிரிவுகள்
தொழில்நுட்பம்

கடை மூடும் Geocities – இணையவெளியில் இன்னொரு கருந்துளை

நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு(http://www.geocities.com/troyal20012001/) Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities சேவையை இந்த வருடத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

We have decided to discontinue the process of allowing new customers to sign up for GeoCities accounts as we focus on helping our customers explore and build new relationships online in other ways. We will be closing GeoCities later this year. -Yahoo!

இணையப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்ங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமையும், வலைப்பதிவுகள், டுவீட்டர் போன்ற சேவைகளை பயனர்கள் நாடுவதும் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்துடன் Yahoo நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நிர்வாக நிதிநிலை சிக்கல்களும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இணையத்தளங்கள் பிரபலமடைய ஆரம்பித்த காலப்பகுதியில் தனது சேவைகளை தொடங்கிய GeoCities பலருக்கும் தமது தனிப்பட்ட தளங்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. GeoCities ஒரு இணையத்தளம் உருவாக்குவதை பயனருக்கு இலகுவாக்கி domain பதிவு HTML போன்றவை இன்றி இலகுவாக தளங்களை உருவாக்குவதில் முன்னோடியான தளமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே தமிழிலும் பல நூறு தளங்கள் GeoCitieல் அமைக்கப்பட்டன. நான் இதுவரை இணையத்தில் உலாவும் பல சந்தர்ப்பங்களில் பல பயனுள்ள தமிழ் தளங்கள் GeoCitiesல் கண்டிருக்கிறேன்.

ஆனாலும் GeoCities தளங்களில் பலவும் சாதாரண பயனர்களால் உருவாக்கப்பட்டவையே. முக்கியமாக பல தமிழ் GeoCities தளங்கள் பயனுள்ள தகவல்களை கொண்டிருந்தாலும் அவற்றில் பல தற்போது கவனிப்பாரற்றே இருக்கின்றன. இந்த நிலையில் GeoCities தளம் முடப்படும் போது, இந்த தளங்களும், முக்கியமாக அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள பல ஆயிரங்கள் வரையான கவிதைகள், கட்டுரைகள் என்பனவும் காணாமல் போகும் நிலையே ஏற்படும்.

ஆகவே நண்பர்களே உங்களின், அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களின் தளங்கள் ஏதும் இருந்தால் அவற்றையும் வேறு இடங்களுக்கு மாற்றிவிடுங்கள். நான் பார்த்தவரையில் பல நூறு தளங்கள் தமிழில் இருக்கின்றன, அவற்றில் சிலவாவது எஞ்சட்டும்.

இணையத்தின் நிலையாமை பற்றிய இந்த பதிவுகளையும் படிக்கவும்:

2 replies on “கடை மூடும் Geocities – இணையவெளியில் இன்னொரு கருந்துளை”

எனக்குத் தெரிந்து நான் முதலில் பழகிய பயன்படுத்திய இலவச இணைய வழங்கி இந்த Geocities. ஏற்கனவே எனது தளத்தினை மூடிவிட்டார்கள்… 😦 [பயன்பாடு குறைவாம்…]. இன்னமும் அத்தளத்தினைப் பயன்படுத்துபவர்கள் வேறு தளத்திற்கு மாற்றுவது நல்லது. மிகவும் பயனுள்ள தகவல் நிமல்.. 🙂

Like

நானும் 2000 வருடத்தில் ஜியோசிட்டீசில் தான் சில பக்கங்களை உருவாக்கி மகிழ்ந்தேன்.dialup காலங்கள் அவை. சில கோப்புகளை ஏற்றி அதை லிங்குகளாகக் கொடுப்பேன். புகைப்படங்களை ஏற்றி இல்லாத வம்பெல்லாம் செய்திருக்கிறேன். html கூடத் தெரியாத காலங்கள் அவை.இப்படித்தான் கூகிள் பேஜஸ் வந்தபோது அதில் கொஞ்சம் படம் காட்டினேன். இப்போது ப்ளாக்கரிலும் படம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.நாளை என்ன?

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.