பிரிவுகள்
அனுபவம்

விட்டு விலகியது…

அந்த சம்பவம் முதலில் நடந்தது பதினோராம் வகுப்பில் படிக்கும் காலத்திலென்று நினைக்கிறேன். அதுவரை இல்லாத பொறுப்பு வந்ததோ இல்லையோ,வெறுப்பு மட்டும் வரவர கூடிக்கொண்டே வந்தது. ஓருவாறாக என்னவேன்றே புரிந்து கொள்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிடிருந்தது. பின்னர் பன்னிரெண்டாம் வகுப்புக்கு வந்ததுடன் எல்லாம் முடிந்தது போல் இருந்தது.

அதுவும் ஒரு வருடத்தில் தலைகீழாக மாறி அதே எண்ணங்கள், அதே பயங்கள், அதே வெறுப்புக்கள். ஒரே வித்தியாசம் இந்தமுறை உள்ளூர சிறியளவு விருப்பமும் இருந்தது. முடிவு எப்படியிருந்தாலும் முயற்சித்து பார்க்கும் எண்ணம் வந்திருந்தது. மாதங்கள் வருடங்களாக அதுவும் நடந்து வாழ்க்கையும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அப்போது ஆசைப்பட்டது, கிடைக்காது என்று நினைத்தது, கிடைத்த போது மகிழச்சி எல்லை கடந்த நிலையில் இருந்தேன். ஆனால் இதுவும் குறுகியகாலத்திற்கு தான் என்பதை அப்போது நான் உணர்ந்திருக்கிவில்லை.

சில மாதங்களிலேயே மீண்டும் அதே அதே எண்ணங்களும் சம்பவங்களும். ஆனால் இப்போது அவை பழகிவிட்டிருந்தன. அதன் பின்னரான அண்மைய காலங்களில் இந்த சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளாகிப்போயின. முடிவுகள் எவ்வாறான போதும் முயற்சிக்கும் மனப்பக்குவும் வந்திருந்தது. இவ்வாறாக சில பல படிகளை தாண்டி இன்றய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போதைக்கு எல்லாம் விட்டு விலகியது போல் உணர்கிறேன்.

பார்க்கலாம்… இனி வாழ்க்கை காட்டும் பாதையை…!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: பரீட்சை, exams, “all my final semester exams are over…!”

6 replies on “விட்டு விலகியது…”

//அப்போது ஆசைப்பட்டது, கிடைக்காது என்று நினைத்தது, கிடைத்த போது மகிழச்சி எல்லை கடந்த நிலையில் இருந்தேன்.// எனக்கு விளங்குது!! 😉

Like

முதல்ல வேறெதுவோ என நினைத்தேன்…tag பார்த்ததும் முழுமையாகப் புரிந்து விட்டது.அன்புடன் அருணா

Like

மொதல்ல புரியல நிமல்…அப்புறம் Tag பாத்ததும் புரிஞ்சுடுச்சு :)) முதல்ல படிச்சப்ப நான் கூட காதல பத்தி சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன் ;)happy hols :)) இல்ல இன்னும் project இருக்கா?

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.