பிரிவுகள்
அனுபவம்

நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை

0
நீ என்னை காதலிக்கிறாய்.
நானும் உன்னை காதலிக்கிறேன்.
[ஒரு வருடம்]

1
நான் உன்னை காதலிக்கவில்லை.
நீ என்னை காதலிக்கிறாய்.
[நான்கு வருடங்கள்]

5
நீ இன்னமும் என்னை காதலிக்கிறாய்.
நான் உன்னை காதலிக்கலாம்…(?)
நான் உன்னை காதலிக்கிறேன்.
[இரண்டு வருடங்கள்]

7
நான் உன்னை காதலிக்கிறேன்.
இன்னொருவன் உன்னை காதலிக்கிறான்.
நீ …?
நான் உன்னை காதலிக்கிறேன்.
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
[ஒரு வருடம்]

8
நீ இன்னொருவனை காதலிக்கிறாய்.
நான் …?
[ஒரு வருடம்]

9
நான் இதை வலைப்பதிவில் எழுதுகிறேன்.
நீ இதை வாசிக்கலாம்…(?)

அன்புடன்,
நிமல்

பி.கு.:

  1. இது கதையோ, கவிதையோ அல்ல.
  2. இது முற்று முழுதான ‘கற்பனை’.

7 replies on “நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை”

நீங்கள் கணிதம் படித்த ஒருத்தன் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. :-)ஆக, 9 வருடங்களாக முற்று முழுதான கற்பனைக் காதலில்…. (வசனத்தை எப்படி முடிப்பது?)இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

Like

//இது 'கற்பனை' என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.//இது எமது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றது நிமல்.. :)வாழ்த்துக்கள்….

Like

// 9நான் இதை வலைப்பதிவில் எழுதுகிறேன்.நீ இதை வாசிக்கலாம்…(?)வலைப்பதிவுகளில் ஒரு காதற் கடிதம்… // 1நான் உன்னை காதலிக்கவில்லை.நீ என்னை காதலிக்கிறாய்.[நான்கு வருடங்கள்]இதனை முதல் நான்கு வருடங்களில் செய்திருந்தால் இந்த வலைவிடு தூது தேவைப்பட்டு இருக்காது என்று எனக்குத் தோன்றுகின்றது நிமல்.. 🙂

Like

@சுபானு: அனுதாபங்கள் என்று வந்திருக்க வேண்டும், வாழ்த்துக்கள் என்று அல்ல.இது தூதுவும் இல்லை, நான் சாதுவும் இல்லை (rhyming)…!//வலைப்பதிவுகளில் ஒரு காதற் கடிதம்… //உண்மையில் இது நான் எழுத இருக்கும் ஒரு குறுந்தொடருக்கான Outline மட்டுமே…!ஒரு conspiracy உருவாக்குவதற்கான என்னையும் சம்பந்தப்படுத்துவது போல் எழுதப்பட்டுள்ளது.அவ்வளவே…!

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.