பிரிவுகள்
அனுபவம்

எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும் – ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம்

“அத்துடன் பலவகை இன்னல்களால் நாள்தோறும் அல்லுற்றுக்கொண்டிருக்கும் மக்களை மனதில் சற்று நிலை நிறுத்துவோமாக! வெறுமனே வெட்டி பந்தாவையும் வெற்று பகட்டையும் குறைத்து…! நன்றி தோழர்களே!”
– இது யாரால் யாருக்கு எப்போது


– இதில் யார் எங்கு எப்போது

கேடயக்குறிப்புக்கள்:

  1. வெள்ளவத்தையில் கூத்தடிப்பதே எனது முக்கிய தொழில்.
  2. வெள்ளவத்தை என்கிற வத்தையை ஏதோ ஆளுகிற நினைப்பில கொழுப்பேறிப் போய் திரிகிறேன்.
  3. கொழும்பு திமிரில திரிகிறேன்.
  4. வெள்ளவத்தையில இருக்கிறபடியால் குறைந்த விலைக்கெல்லாம் பொருட்கள் வேண்டமாட்டேன்.
  5. எனக்கு costly ஆய் தான் items எல்லாம் வேணும்.
  6. தமிழ் தெரியாததாய் காட்டிக்கொள்ள பெருமைப்படுவேன். ஆங்கில மகனாக வெட்டிப்பந்தாவையும் வெற்றுப்பகட்டையும் செய்வேன்.
  7. எனக்கு உணர்வுகளும் உணர்ச்சிகளும் இருக்கென்று நானே நினைக்கவில்லை.
  8. Facebook, Hi5, Orkut, MySpace, Blogger, தமிழ்மணம், தமிழிஷ், தமிழ்வெளி, Google Groups, Yahoo Groups, Mailing lists, Postcard list மற்றும் இதர பொது, தனிப்பட்ட குழுக்களிலும் famous ஆக வேணும் என்றதுக்காகவே வாய்க்கு வந்ததெல்லாம் எழுதுகிறேன்.
  9. எனது இந்த கொழுப்புகள், திமிருகள் எல்லாம் அடக்கப்பட்டு சீர் செய்ய ஆராவது வந்தால் நல்லம்.
  10. வீட்டில இருந்து உளைவெடுத்துக்கொண்டிருக்கும் காரணத்தாலேயே இதை எழுதுகிறேன்.

இது தொடர்பான பின்னூட்டங்கள், கருத்துக்கள், கடுப்புக்கள் எல்லாம் தங்குதடையின்றி வெளியிடப்படும். ஆனால் யாரும் சாட்டிலோ, போனிலோ, ஈமெயிலிலோ, பக்ஸ்சிலொ, டெலெக்சிலோ, கடிதத்திலோ, தபாலட்டையிலோ மற்றும் இதர மார்கங்களிலோ இதை நீக்கச்சொன்னால் நிச்சயமாகக நீக்கப்பட மாட்டாது. இந்த விளையாட்டுக்கு வர விருப்பமில்லாதவர்கள் வரத்தேவையில்லை. வர விரும்புபவர்களும் வரவேண்டிய கட்டாயம் இல்லை.

சும்மா இங்க இருந்து கொண்டு வாயால் வெட்டி வீரம் கதைக்கிறதுக்கு என்னவிட்டா வேற ஆள பிடிக்கிறது கஸ்டம். நான் குரைக்கிற நாய், கடிக்கமாட்டேன்.

இது சிலரை குத்திக்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. தொப்பி சரியானவர்கள் போடவும், மற்றவர்கள் பக்கத்தில் இருப்பவரிடம் தொப்பியை கொடுக்கவும்.

One statement from me. As I can’t do anything in action, and do it without any noises; I can’t just keep my mouth closed & shut up. Hope you can understand this languages too. If any difficulties please contact me without any hesitation.

மாறாத அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: Colombo, Wellawatte, dog, me, who

25 replies on “எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும் – ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம்”

//வெள்ளவத்தை என்கிற வத்தையை ஏதோ ஆளுகிற நினைப்பில கொழுப்பேறிப் போய் திரிகிறேன்.நீங்கள் மட்டுமல்ல பலபேர் இங்கு இவ்வாறுதான் திரிகின்றார்கள்.. (இது பலரை குத்திக்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது)

Like

சும்மா இங்க இருந்து கொண்டு வாயால் வெட்டி வீரம் கதைக்கிறதுக்கு என்னவிட்டா வேற ஆள பிடிக்கிறது கஸ்டம். நான் குரைக்கிற நாய், கடிக்கமாட்டேன். //வெள்ளவத்தை மானத்தைக் கப்பலேற்றிட்டீங்க…… ம்,…ஏன் நாய்க்கும் உங்களுக்கும் என்ன தொடர்பாம்????

Like

//One statement from me. As I can't do anything in action, and do it without any noises; I can't just keep my mouth closed & shut up. Hope you can understand this languages too. தெளிவா விளங்குகின்றது தோழரே… எதனையும் வெளிப்படையாகச் செய்ய முடியவில்லையே என்கின்ற ஆதங்கம்… விடியல் வரும் அதுவரை இவ்வாறே தொடர்வோம்.. அதுவே எமக்கும் நல்லது எம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது… ( இது சற்று சுயநலமான வார்த்தைதான்.. இருந்தாலும் இதுவே யதார்த்தம்.. )

Like

//சும்மா இங்க இருந்து கொண்டு வாயால் வெட்டி வீரம் கதைக்கிறதுக்கு என்னவிட்டா வேற ஆள பிடிக்கிறது கஸ்டம். வேறு என்னத்தைச் செய்யமுடியும்… இனிமேல் கதைக்கும் போது கொஞ்சம் கவனம்.. 20 வருடம் சிறையை அனுபவிக்க முடியுமா.. ?

Like

@அனானி:தப்பா வந்திட்டிங்கள்… 🙂 பெயர் போடாதபடியாலும், சம்மந்தமில்லா படியாலும் உங்கட பின்னூட்டத்தை அழிக்க வேண்டியதாயிட்டுது.—@மெல்போர்ன் கமல்:பெரிய வித்தியாசமில்லை…!—@மதுவதனன் மௌ:புரியாம இருக்கிறதே நல்லது :)—@சுபானு:உங்களுக்கு சரியா விளங்கி இருக்கு/இல்லை…. 🙂

Like

சுபானுவுக்குத்தான் ரொம்ம்ம்ப தெளிவா விளங்கி இருக்கு ;)என்னத்த கதைச்சாலும் இப்ப அரசியலுக்கயே இழுத்துக்கொண்டு போக வெளிக்கிட்டார். அண்ணை பயப்படாதேங்கோ, உங்கள 20 வருசம் எல்லாம் உள்ளுக்க போடமாட்டாங்கள். ஆளை பாத்திட்டே விட்டிடுவாங்கள் 🙂

Like

அதென்ன இருக்கு/இல்லை..? இருக்குதா அல்லது இல்லையா… தெளிவாச்சொல்லுங்கோ…

Like

அதுசரி அந்கப் படத்தில இருப்பவங்களுக்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம் நண்பரே…? பாவம் அவங்க.. ;(

Like

@ Ramanan Satha//என்னத்த கதைச்சாலும் இப்ப அரசியலுக்கயே இழுத்துக்கொண்டு போக வெளிக்கிட்டார்சொந்தக் கதையெல்லாம் வேண்டாம் … 🙂

Like

ஏன் எதுக்கு என்று இரண்டு விதமாக புரிஞ்சு கொண்டது சரியா என்று தெரியேல… ஆனால்..//As I can't do anything in action, and do it without any noises; I can't just keep my mouth closed & shut upI agree 100% with this.

Like

உண்மையில் இது இரண்டு விடையங்கள் குறித்தே எழுதப்பட்டது.1. ஒரு சிலரை தனிப்பட்ட காரணங்களுக்காக குத்திக்காட்டுவது. (ஒரு சிலரில் நானும் அடங்குவதாக யாராவது சொன்னால், அது பற்றி கருத்து தெரிவிப்பதிலிருந்து நான் விலகியிருக்கிறேன்.)2. எனது தனிப்பட்ட சில கருத்துக்களை பதிவது.இது அந்த சிலருக்கு மட்டும் தங்களைப்பற்றியது என்று விளங்கும் வகையிலும், ஏனையவர்களுக்கு பொதுப்படையாக விளங்கும் வகையிலும் எழுதப்பட்டது. அது தான் இந்த இரண்டு வித புரிதலுக்கு காரணமாக இருக்கலாம்.

Like

ஆக எனக்குப் புரிந்த இரண்டு விதங்களும் சரியாக இருக்க வாய்ப்புண்டு.. பரவாயில்லை நான்.. 🙂

Like

ஆக…. வேறுபட்ட ஆக்களுக்கு வேறுபட்ட புரிதல்களை குடுக்கக் கூடியவாறு எழுதிய நீங்கள் எப்போதோ செத்துவிட்டீர்கள். அதாவது "ஆசிரியன் செத்துவிட்டான்". அதாகப்பட்டது ஒரு பின்னவீனத்ததுவப் பதிவொன்றை எழுதியிருக்கிறீர்கள்.மிக்கி மவுச்சுகளின் படம் நன்னாருக்குமதுவதனன் மௌ.

Like

நீங்கள் ஒரு முன் நவீனத்துவத்துக்கும் பின் நவீனத்திவத்துக்கும் இடைப்பட்ட நடுநவீனத்துவத்தின் பாதையில் உங்கள் எழுத்து வண்டியை ஓட்டுகிறீர்கள்![ஓண்டுமே விளங்கெல்ல எண்டதைதான் சொல்லுறன் 😀 ]

Like

@ஆதித்தன்:நன்றி… நன்றி…உங்களின் வேண்டுகோளுக்கிணங்க(?) இவ்வாறாக இன்னும்பல நடுநவீனத்துவ பதிவுகளை தரமுயற்சிக்கிறேன்.

Like

@Divyapriya:எனக்கே சரியா புரியல….(?)basically இது ஒரு மொக்கை… :)மற்றப்படி கொஞ்சம் அரசியல், அது, இது எல்லாம் கலந்து கட்டி எழுதி, கடைசில ஒன்னுமே புரியாம போயிருச்சு…!

Like

//One statement from me. As I can't do anything in action, and do it without any noises; I can't just keep my mouth closed & shut up. Hope you can understand this languages too. If any difficulties please contact me without any hesitation.//I am not trying to be smart here. I just wish that people dont make fun of themselves. 1) – one statement is incorrect. A statement could be better2) – Could say "I cant keep my mouth shut though i am not able to do something in action / even though i cant do anything… or cant shut my trap…… 3) – Trust you understand / hope you understand. * hope you understand English as well. 4)- This is for singular and languages is plural so "This languages" is incorrect. 5)- Dont hesitate to contact me if…………..Its better to not write in English. Dont need to be shy to write in Tamil as its our language. No one can laugh at you if you dont know English. But, if you try to fool yourself by showing off you language skill then I am sorry I cant stop pointing it out.Germans / Japanese / French are proud to talk in their language. So lets not fool ourselves.

Like

@Anonymous: சாரி பாஸ்…!!!//I just wish that people dont make fun of themselves. //ஐயோ… நான் அப்பிடிதான்…!நமக்கு இங்கிபலீஸ் எல்லாம் உங்களளவுக்கு வராது… ஏதோ தெரிஞ்ச 26 எழுத்த அங்க இங்க எண்டு மாத்தி போட்டு எழுதிறது தான்… ஏதோ என்னால முடிச்சது, இதிலையாவது எழுதி இங்கிபலீஸ் படிப்பமே எண்டு தான்….!//But, if you try to fool yourself by showing off you language skill then I am sorry I cant stop pointing it out.//சும்மா பிழைவிட்டு பிழை விட்டு தானே எழுதி பழக ஏலும்…. உங்களப்போல் இங்கிபிலீசு தெய்வங்களை புண்படுத்தி இருந்தா, மன்னிச்சிருங்க சாமி…!//Germans / Japanese / French are proud to talk in their language. So lets not fool ourselves.//இதெண்டால் சத்தியமான உண்மை சாமி… நீங்களும் அப்பிடியே தமிழில எழுதி இருந்தா எனக்கும் சரியா விளங்கியிருக்கும்… ஆனாலும் நான் உங்களை பிழை சொல்லேல்லை…!உங்களைப்போல் இங்கிபிலீஸ் மக்களும் என்ட பதிவுகளை வாசிக்கிறத நினைச்சா எனக்கு ஒரே புல்லரிப்பா இருக்கு…!!உங்கள் மேலான கருத்துக்களுக்கு அதிலும் மேலான நன்றிகள்…!!!

Like

Just a note for all the English readers who read this blog (how come???), I'm not literate enough to write the "correct" English as you people might expect. I just write what I know… So if you think its hurting your feelings towards the language of English, I'm rally really sorry…!!!இதில இங்கிபிலீஸ் பிழை எண்டு வராதயுங்கோ… எனக்கு தெரிஞ்சது இவ்வளவு தான்.

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.