பிரிவுகள்
பொது

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன்

அனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்…!


இண்டைக்கு சும்மா கன நாளைக்கு பிறகு பேஸ்புக்/மூஞ்சிப்புத்தகம் (Facebook) பாத்துக்கொண்டிருக்கிருந்தேன். திடீரெண்டு ஒரு பக்கத்தில நல்லூர் கந்தன் முகப்பு படம். என்னடா எண்டு பாத்தால் கீழ நான் பாத்துக்கொண்டிருந்த படத்துக்கு முன்னேஸ்வரம் என்பது டிஸ்கிரிப்ஷனாக இருந்தது.


(படத்தில கிளிக்கினால் பெருசா பார்க்கலாம்)

Facebook Ads என்பது தொடர்புடைய (related) விளம்பரங்களை காட்டும். அந்த வகையில் முன்னேச்சரத்திற்கு நல்லூர் ஒரு கோவில் என்றவகையில் தொடர்புபட்டவைதான். அவ்வாறேனில் Facebook க்கு தமிழ் தெரியுமா?
எல்லாம் நல்லூர் முருகன் செயல்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

5 replies on “கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன்”

Facebook இற்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ தெரியாது. ஆனால் நல்லூர் முருகனுக்கு தமிழ் தெரியும்.. 😀

Like

ஃபெஸ்புக்கிற்கு தமிழ்தெரிதல் நிகழ்காலத்தில் சாத்தியப்படவில்லை.எதிர்காலத்தில் நடக்கலாம். ஆனால்மேற்சொன்ன சம்பவம் நடக்க காரணம் உண்டு.குறித்த புகைப்படத்தை வெளியிட்ட நண்பர் "நல்லூர் முருகன்" [ஃபெஸ்புக்]குழுமத்தின் உறுப்பினராயிருக்கக்கூடும். இன்னும் உங்களுடைய பல ஃபெஸ்புக் நண்பர்கள் அக் குழுமத்தின் உறுப்பினர்களாயிருக்கக்கூடும். இத்தகு பெருந்தகுதிகள் பெற்ற உங்களுக்கு அக்குழுமத்தை பற்றிய தகவல் பயன்படலாம் என்று அந்த மென்பொருள் கருதி இவ்விளம்பரத்தை உங்களுக்கு காண்பித்திருக்கலாம்.காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தகதையாக, அவ்விளம்பரம் நீங்கள் இந்த புகைப்படம் பார்க்கையில் காண்பிக்கப்பட்டமை ஒரு தற்செயல் நிகழ்வே!———————————————–[நான் உட்பட]சிலர் தற்செயல் நிகழ்வுகளுக்கும் விதிக்கும் சம்பந்தம் இருக்கிறது என்கின்றனர்.இன்னும் சிலர் விதி இறைவன் உருவாக்கியது, அதை மாற்றியமைக்கவோ திருத்தவோ அவனால் இயலும் என்கின்றனர். இக்கூற்று உண்மை எனில்//எல்லாம் நல்லூர் முருகன் செயல்.//என நீங்கள் எழுதியிருப்பதும் உண்மைதான். 😀

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.