பிரிவுகள்
தொழில்நுட்பம் Oliyoodai Tamil Podcast

லினக்ஸ், உபுண்டு – ஒரு அறிமுகம் [1.02]

திறந்த ஆணைமூல இயங்குதளமான லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு பற்றியும் கலந்துரையாடியுள்ளோம்.

எமது இரண்டாவது Podcast இல் நாம் திறந்த ஆணைமூல இயங்குதளமான (Open Source Operating System) லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு (Ubuntu) பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். இது ஆரம்ப பயனர்களுக்கும், லினக்ஸை பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஒலியோடை முதலாம் வாரத்தை விட சற்று நீண்டுவிட்டது. மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிப்பதிவு செய்ததை 16 நிமிடத்திற்கு குறைத்திருக்கிறோம். நீண்ட ஒலிப்பதிவுகளை நேயர்கள் பொறுமையுடன் கேட்பார்களா என்ற சந்தேகமே காரணம். இது தொடர்பிலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். இந்தவார ஒலியோடையை பொறுமையுடன் கேட்கவும்… 🙂

Download

குறிப்புகள்:

இந்த பொட்காஸ்ட் பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். ஒலித்தரம், மொழிநடை போன்றவை தொடர்பான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களும் ஊக்குவிப்புக்களுமே இனிவருங்காலங்களில் எமது ஒலியோடையை மேலும் மெருகேற்ற உதவிபுரியும்.

மீண்டும் சந்திக்கலாம்.

5 replies on “லினக்ஸ், உபுண்டு – ஒரு அறிமுகம் [1.02]”

அருமையாக இருக்கிறது . .வாழ்த்துக்கள்உபுண்டு தவிர Fedoraவைப்பற்றியும் கதைக்கலாமெ . அதுவும் கொஞ்சம் இலகுதன்மை வாய்ந்தது தானே ?

Like

நன்றி மாயா..Fedoraவைப்பற்றியும் கதைக்கலாம் என்று தான் இருந்தோம்… நேரத்தை குறைப்பதற்காக தவிர்க்க வேண்டியதாகிவிட்டது. முடிந்தால் இன்னொரு முறை கதைக்கலாம்.(அத்துடன் பின்னூட்ட பெட்டியை திறக்க உதவியதற்கும் நன்றி)

Like

அருமையான முயற்சி. ஆங்கிலத்திலே பயின்ற என் போன்றவர்களின் தமிழார்வத்தை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இயல், இசை, நாடகத்தமிழ் மட்டுமின்றி அறிவியல் தமிழையும் வளர்த்தாலன்றி தமிழ்ப்பற்று முழுமைப் பெறாது.

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.