பிரிவுகள்
அனுபவம்

பேப்பர்கள் – பரீட்சை – திரட்டி – மீண்டும் வருதல்

கடந்த இரண்டு மாதங்களாக பிற வேலைகள் சற்று அதிகம் இருந்ததால் பெரிதாக எதுவும் எழுத முடியவில்லை. (இல்லாட்டி மட்டும்??)

முன்குறிப்பு: பின்குறிப்பை வாசிக்கவும்

முதல்ல ஒரு பேப்பர் தரவேணும் எண்டு சொல்லிச்சினம். பேப்பர் தானே தினமும் வாசிச்சிக்கறம் எண்டால் அது research பேப்பராம், சும்மா எல்லாம் எழுதேலாதாம். ஐ3இ (IEEE) முறைப்படிதான் எழுதோணுமாம். சரியெண்டு ஒருமாதிரி ஏதோ எழுதினம். பிறகு சொல்லிச்சினம் ஒரு draft கொண்டுவாங்கோ எண்டு. சரியெண்டு எடுத்திட்டு போனா அதில ஏதோ சரி பிழை எல்லாம் சொல்லிச்சினம். எங்களுக்கிண்டா எதுவும் விளங்கேல்லை. பரவாயிலை எண்டு formatting மட்டும் மாத்தீட்டு குடுத்திட்டம், என்ன நடக்கும் எண்டு தெரியேல்லை.

அது முடிச்சா இன்னும் ஏதேதோ assignment எல்லாம் தந்திச்சினம். என்னெண்டு விளங்கிறது முக்கியமில்லை, submit பண்ணுறது தான் முக்கியம் என்ற பெரும் தத்துவத்தின்படி ஒருமாதிரி செய்து முடிச்சம்.

சரி எல்லாம் முடியுது எண்டு நினைக்க முதலே semester exams வந்திட்டுது. செமஸ்டரில assignments, papers, project work எண்டு சரியா படிக்க முடியேல்லை. (இல்லாட்டி மட்டும்??). சரியெண்டு சொல்லி ஒரு கிழமைக்கு “பரீட்சைக்கான கும்மி” ஏற்பாடு செய்து (இதப்பற்றி இன்னொரு பதிவில விளக்கமா எழுதலாம்), ஒருமாதிரி பரீட்சைகளும் நேற்றோடு முடிஞ்சுது. (இங்க பார்க்க: Done with Exams)


www.math.kent.edu/~white/ugcolloq/

இதுக்கிடையில சும்மா இருக்க கட்டாம நாமளும் ஒரு திரட்டி செஞ்சா என்ன எண்டு நினைச்சு தொடங்கினது தான் http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/. இதுவரை எதுவும் உருப்படியா செய்ய முடியேல்லை. இனித்தான் எதாவது செய்யோணும்.

இனி கொஞ்சம் நேரம் கிடைக்கேக்கை ஏதாவது எழுதுவம். உருப்படியா எழுத ஆசைதான், ஆனா ஏனே முடியிறதில்லை. முயற்ச்சிக்கலாம்.

பின்குறிப்பு:
பேச்சு வழக்கில் எழுத ஒரு முயற்சி செய்து பார்த்தேன். சரியாக வரவில்லை என்பது எனக்கே உணரக்கூடியதாக இருக்கிறது. புரியாதவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் கேட்கலாம். 🙂

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

11 replies on “பேப்பர்கள் – பரீட்சை – திரட்டி – மீண்டும் வருதல்”

நல்ல முயற்சி…நீங்கள் சொல்ல வந்த கருத்தை சொல்லியிருக்கும் முறை மற்றும் அமைப்பு நன்றாகவுள்ளது..தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம் நிமல்.இனிய புன்னகையுடன்,உதய தாரகை

Like

கும்மிய பற்றி ஒரு பதிவு எழுதலாமே..:) (அதப்பற்றி ஒரு தொடரே எழுதலாம்…) ஒரு ஞாபகப்பதிவாக இருக்கும்.

Like

ஒம் அந்த எண்ணம் இருக்கிறது. அதை ஒரு கும்மி பதிவிக தொடராக எழுதலாம். வீடியோ, போட்டோ எல்லாம் போடலாம். முடிஞ்ஞா அதப்பற்றி ஒரு பொட்காஸ்ட் செய்வம்.

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.