பிரிவுகள்
தொழில்நுட்பம்

Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு

சில நேரங்களில் சிறிய கருத்துக் கணிப்புக்களை (survey) செய்யும் தேவை நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்போது கூகிளாண்டவரின் புண்ணியத்தால் அது இன்னமும் இலகுவாகிறது. இப்போது Google Docs spreadsheet பயன்படுத்தி இலகுவாக படிவங்களை உருவாக்க முடிவதுடன், வாசகர்களின் கருத்துக்களை சேகரித்து உங்களின் வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதும் இலகுவாகிறது.

பின்வரும் படிமுறைகளை பயன்படுத்தி நீங்களும் ஒரு சர்வேயை உருவாக்கலாம்.

  1. Google Docs பக்கத்திற்கு சென்று New->Spreadsheet தெரிவு செய்யவும்.
  2. விரும்பிய பெயரைக் கொடுத்து சேமிக்கவும் (Save).
  3. Share ஐ அழுத்தவும்.

  4. ‘Invite people:’ என்பதில் to fill out a form என்பதை தெரிவு செய்யவும்.

  5. இறுதியாக Start editing your form… என்பதை தெரிவு செய்யவும்.

    புதிய சாளரத்தில் படிவம் ஒன்றின் மாதிரி காட்டப்படும். அதில் விரும்பிய வகையில் வினாக்களையும் விடை தெரிவுகளையும் உருவாக்கவும்.

  6. இனி என்ன…! சர்வேயை தொடங்குங்க…!

மேலதிக விபரங்களுக்கு இங்கே அல்லது இங்கே பார்க்கவும்.

பரீட்சார்த்த படிவத்துக்கு இங்கே பார்க்கவும்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

2 replies on “Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு”

@Anonymous:எனக்கு Google Docs ஐ காட்டிலும் Zohoவே பிடிக்கும். ஆனாலும் இதர Google சேவைகள் காரணமாக Google Doc பயன்படுத்துவது அதிகம்.

Like

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.